Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையை குறை சொல்ல வேண்டாம்.. நீங்க சறுக்கியதுக்கு காரணமே வேறு.. கோலிக்கு பறந்த பகீர் மெசேஜ்

சென்னை: சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் கடுமையாக திணறி வருகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. முதல் மூன்று நாட்கள் முழுக்க இங்கிலாந்து அணிதான் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

போராட்டம்

போராட்டம்

பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி 378 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும். இதனால் இன்று விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இன்று மட்டும் விக்கெட் விழவில்லை என்றால், இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இங்கிலாந்து வீரர்கள் சென்னை பிட்சில் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். பெஸ் போன்ற பவுலர் பேட்ஸ்மேன்கள் கூட இந்த பிட்சில் சிறப்பாக ஆடினார்கள். பர்ன்ஸ் , சிப்லி, ஜோ ரூட், ஸ்டோக்ஸ், பட்லர் என்று இங்கிலாந்து வீரர்கள் எல்லோருமே இந்திய பவுலர்களை திணற வைத்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய வீரர்கள் கோலி, ரோஹித், ரஹானே, கில் என்று முக்கிய டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். இதற்கு பிட்ச்தான் காரணம், சென்னை பிட்ச் மாறிவிட்டது. மூன்றாவது நாள் ஆட்டம் என்பதால் பிட்ச் பவுலிங் பிட்சாக மாறிவிட்டது என்று கூறப்பட்டது.

சிக்கல்

சிக்கல்

இந்திய அணி பவுலிங் செய்யும் போது பிட்ச் இப்படி பவுலிங் பிட்சாக இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்துப்படி பிட்ச் ஒன்றும் பவுலிங் பிட்சாக மாறவில்லை. மொத்தமாக பிட்ச் இந்திய அணிக்கு எதிராக திரும்பவில்லை. லேசான மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

இந்திய வீரர்கள் அவுட் ஆனதற்கு சென்னை பிட்சை காரணமாக சொல்ல முடியாது. பிட்ச் அப்படியேதான் இருக்கிறது. அதேபோல் இங்கிலாந்து பவுலர் டொமினிக் பெஸ் நான்கு விக்கெட் எடுத்தாலும் கூட அவ்வளவு கஷ்டமான பவுலிங் எல்லாம் செய்யவில்லை. கணிக்க கூடிய வகையிலேயே வீசினார்.

தவறு

தவறு

இதில் தவறு முழுக்க முழுக்க இந்திய வீரர்கள் மீதுதான். பேட்ஸ்மேன்கள்தான் சரியாக ஆடவில்லை. முக்கியமாக கோலி களத்தில் நின்ற விதம் தொடங்கி ஷாட்களை தேர்வு செய்த விதம் வரை எதுவும் சரியாக இல்லை. பந்தை கணிக்க முடியாமல் அவர் திணறுகிறார் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 பிட்ச் பழி

பிட்ச் பழி

பிட்ச் மீது மொத்தமாக பழி போட முடியாது. பேட்ஸ்மேன்கள் சறுக்கியதற்கு காரணமே அவர்கள் சரியாக ஆடாதது மட்டும்தான். சரியான ஷாட்களை டாப் வீரர்கள் யாரும் தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கோலிக்கு இந்திய அணியின் பயிற்சிக்கு குழு மூலம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, February 8, 2021, 11:53 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+