Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது.. இந்தியாவை காலி செய்த இங்கிலாந்தின் "தந்திரம்".. காரணம் சென்னை!

சென்னை: இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி ரிவர்ஸ் ஸ்விங் மூலம் அதிரடியாக பவுலிங் செய்து வருகிறது. ரிவர்ஸ் ஸ்விங் அஸ்திரத்தை இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து கையில் எடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா திணறி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 விக்கெட்டை இழந்து இந்திய அணி 117 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா வெற்றிபெற இன்னும் 303 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோலி தனியாளாக மைதானத்தில் போராடி வருகிறார்.

கோலி

கோலி

இந்திய அணி வரிசையாக இன்று காலையில் இருந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. காலையில் கொஞ்சம் அதிரடியாக ஆடிய புஜாரா அவுட்டாகி பெவிலியன் சென்றார். அதன்பின் அரைசதம் அடித்து இருந்த சுப்மான் கில் அவுட்டாகி பாதியில் வெளியேறினார். பின் வரிசையாக விக்கெட் விழுந்தது.

ரஹானே

ரஹானே

சென்ற இன்னிங்சில் 1 ரன்னிற்கு அவுட்டான ரஹானே இந்த போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் வரிசையாக விக்கெட் விழுந்தது. பண்ட் 11 ரன்களுக்கு அவுட் ஆனார். வெறும் 6 ஓவர்கள் வீசிய ஆண்டர்சன் 3 விக்கெட் எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

கில், ரஹானே, பண்ட் என்று முக்கிய வீரர்களின் விக்கெட்டை ஆண்டர்சன் எடுத்தார். இந்த மூன்று விக்கெட்டுகளை ஆண்டர்சன் எடுக்க காரணமே ரிவர்ஸ் ஸ்விங்தான். சென்னை பிட்ச் இன்று காலையில் இருந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகி வருகிறது. இதனால் பிட்ச் பவுலிங் செய்ய சாதகம் ஆகியுள்ளது.

பவுலிங்

பவுலிங்

வரிசையாக பிட்ச் ஒவ்வொரு பந்திலும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. அதோடு நன்றாக பவுன்சும் ஆகிறது. இதனால் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்து வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க சென்னைதான் காரணம் ஆகும். சென்னை பிட்ச் இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

சென்னை பிட்ச்

சென்னை பிட்ச்

சென்னை பொதுவாக கடைசி நாளில் அதிகம் ஸ்விங் ஆகவும். ரிவர்ஸ் ஸ்விங் திடீரென்று ஆகும். இதனால்தான் தற்போது இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வருகிறது. மீதம் இருக்கும் நாளில் இந்த பிட்சில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

Story first published: Tuesday, February 9, 2021, 16:29 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+