Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ந்த சென்னை மைதானம்.. ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.. ரோஹித்தும் ஷாக்.. ஆரம்பமே இப்படியா?

சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிட்ச் தொடக்கத்தில் இருந்தே ஸ்விங் ஆகி வருகிறது.

சென்னையில் ரசிகர்கள் படைசூழ இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி டாஸ் வென்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

இதில் தொடக்கத்திலேயே இளம் ஓப்பனிங் வீரர் சுப்மான் கில் அவுட்டாகிவிட்டார். இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்திலேயே கில் அவுட்டாகி விட்டார். ஸ்டோன் வீசிய பந்தில் எல்பிடபில்யூ முறையில் கில் அவுட்டானார்.

எப்படி

எப்படி

பந்து கில்லின் காலை நோக்கி வந்தது. இது ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் என்று நம்பி கில் அந்த பந்தை தொடவில்லை. பந்து காலுக்கு செல்லும், ஸ்டம்பிற்கு வெளியே செல்ல வாய்ப்புள்ளது என்று நம்பி அதை காலில் வாங்கினார்.

விக்கெட்

விக்கெட்

ஆனால் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் பந்து ஸ்விங் ஆகி ரிவர்ஸாக சென்று கில் அவுட் ஆனார். இதை அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை . ஏன் எதிரே நின்ற ரோஹித் சர்மாவும் இப்படி பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

ரசிகர்களும் பந்து ஸ்விங் ஆவதை தெரிந்து கொண்டனர். இதனால் முதல் நாளில் இருந்து பிட்ச் ஸ்விங் ஆகிறது என்பது தெரியவந்துள்ளது. வரும் நாட்களில் பிட்ச் இன்னும் அதிகம் ஸ்விங் ஆகும்.

ஷாக்கிங்

ஷாக்கிங்

அதேபோல் இன்று பிட்ச் நன்றாக பவுன்ஸ் ஆகிறது. முதல் டெஸ்டில் நடந்தது போல இது செம்மண் பிட்ச் கிடையாது. இந்த முறை களிமண் சேர்க்கப்பட்டு பிட்ச் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணிக்கு பிட்ச் சாதகமாக இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, February 13, 2021, 10:26 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+