Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

image-17-csk4-200.jpg.jpg tamil.mykhel.com}சென்னை & ஹைதராபாத்: சென்னையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

சென்னை வீரர் மைக் ஹசி 56 பந்துகளில் 83 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்தத் தோல்வியின் மூலம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது.

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

டெக்கான் சார்ஜர்ஸை வீழ்த்திய பஞ்சாப்:

அதே போல ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வென்றது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி.

பஞ்சாப் வீரர் வல்தாட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 47 பந்துகளில் 75 ரன்களையும் குவித்தார். கடந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக இவர் சதமடித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே போல கேப்டன் கில்கிறிஸ்ட் 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

ஐபிஎல்4 மேலும் செய்திகள்

Story first published: Thursday, June 7, 2012, 12:20 [IST]
Other articles published on Jun 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+