Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கத்தை குகையில் சந்தித்து சிதைந்து போன ஆர்சிபி... வெற்றியுடன் துவக்கிய யெல்லோ ஆர்மி

இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலியின் பெங்களூரு அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலியும், பார்த்தீவ் படேலும் களம் கண்டனர்.

தொடக்கமே சரியில்லை

தொடக்கமே சரியில்லை

ஆனால்... தொடக்கமே அந்த அணிக்கு சரியில்லை. ஸ்கோர் 16 ரன்களை எட்டியது. அணியின் கேப்டன் கோலி 6 ரன்களில் ஹர்பஜன் சிங் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் வீழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

மாயாஜால பந்துவீச்சு

மாயாஜால பந்துவீச்சு

அவர் போட்ட பிள்ளையார் சுழி நன்றாகவே வேலை செய்தது. ஹர்பஜனின் மாயாஜால பந்துவீச்சு சுழல... மொயின் அலி, டி வில்லியர்ஸ் இருவரும் அதே ஒற்றை இலக்கத்தோடு பெவிலியன் திரும்பினர்.

வீழ்ந்தன விக்கெட்டுகள்

வீழ்ந்தன விக்கெட்டுகள்

சீட்டுக்கட்டுகள் போல... பந்துகள் பவுண்டரிகளாக, சிக்சர்களாக மாறாமல் விக்கெட்டுக்களாக வீழ்ந்தன. ஹெட்மயர், டுபே, கிராண்ட்ஹோமே, சாய்னி, சாஹல், உமேஷ் யாதவ் என அனைவரும் சிங்கிள் டிஜிட் ஸ்கோரில் வெளியேறி.. பெங்களூரு ரசிகர்களை கடுப்பேற்றினர்.

70 ரன்களுக்கு ஆல் அவுட்

70 ரன்களுக்கு ஆல் அவுட்

ஒரு கட்டத்தில் பார்த்தீவ் படேலும் 29 ரன்களில் அவுட்டானார். 20 ஓவர்களை முடிக்காமலேயே 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் வெறும் 70 ரன்களில் இழந்தது பெங்களூரு அணி.

படு சொதப்பல்

படு சொதப்பல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட் பெங்களூரு அணி முதல் போட்டியின் முதல் ஆட்டத்தில் படுமோசமாக சொதப்பியது. எளிதான வெற்றி இலக்கு அரங்கமே சென்னை அணிக்கு ஆதரவாக குரல் எழுப்பியது.

டக் அவுட்டான வாட்சன்

டக் அவுட்டான வாட்சன்

அடுத்து வந்த சென்னை அணி படு உற்சாகத்துடன் ஆட்டத்தை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக வாட்சனும், ராயுடுவும் வந்தனர். வாட்சன் 10 பந்துகளை எதிர்கொண்டார். ஒரு ரன் கூட எடுக்கவில்லை. சாஹல் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

சூப்பர் சின்ன தல

சூப்பர் சின்ன தல

பெங்களூரு அணிக்கு நம்பிக்கை பிறந்தது. அடுத்து களத்துக்கு வந்தார் ரெய்னா. இருவரும் நிதானமாக ஆடினர். நோபாலில் கிடைத்த ப்ரீ ஹிட் பந்துகளில் மேக்சிமம் ரன்களை எடுத்தனர்.

ரெய்னா சாதனை

ரெய்னா சாதனை

ஒரு கட்டத்தில் பொறுத்து, பொறுத்து பார்த்த ரெய்னா, கிடைக்கின்ற அருமையான பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பினார். ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த அவர், மொயின் அலி பந்தில் டுபேயிடம் ஆட்டமிழந்தார். அவர் எடுத்தது 19 ரன்கள்.

ராயுடு ஆட்டமிழப்பு

ராயுடு ஆட்டமிழப்பு

அவரை தொடர்ந்து.. களம் இறங்கியவர் கேதர் ஜாதவ். இருவரும் நிதானமாக ஆடினர். 28 ரன்கள் எடுத்திருந்த ராயுடு சிராஜ் பந்தில் போல்டானார். அடுத்து களத்துக்கு வந்தவர் ஜடேஜா.

சென்னை வெற்றி

சென்னை வெற்றி

இருவரும் அழகாக அடி, ஒரு வழியாக மிச்சம் எடுக்கவேண்டிய ரன்களை 18வது ஓவரில் எடுத்தனர். இதன் மூலம் முதல் போட்டியில் சென்னை அணி, பெங்களூரை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரின் முதல் வெற்றியை பெற்றது.

Story first published: Saturday, March 23, 2019, 23:20 [IST]
Other articles published on Mar 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+