Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni: இது தான் நம்ம தல... ஏர்போர்ட்டில் வெறும் தரையில் தூங்கும் தோனி.. வைரல் புகைப்படம்

சென்னை: பையை தலைக்கு வைத்து கீழே வெறும் தரையில் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் படுத்து தூங்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சாதனை கேப்டன்கள் என்ற பட்டியலில் தோனிக்கு என்று தனி பெருமை உண்டு. இந்திய அணியினை உச்சத்துக்கு கொண்டு சென்ற அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

எத்தனையோ கேப்டன்கள் இருந்தாலும் தோனியின் நடவடிக்கைகள், அவரது ஆலோசனைகள் இன்றைய இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகின்றன.

தோனியின் திறமை

தோனியின் திறமை

இக்கட்டான நெருக்கடியிலும் தடுமாறாமல் கூலாக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர் தோனி. ஐபிஎல் சீசனில் இன்று வரை அவர் ஹீரோ.

மீண்டு வந்த தோனி

மீண்டு வந்த தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சென்னை அணி சர்ச்சையில் சிக்கி, தடையில் இருந்தபோது மட்டும் புனே அணிக்காக விளையாடினார் தோனி. தடை முடிந்து மீண்டும் களத்துக்கு திரும்பி கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார்.

வைரல் புகைப்படம்

இந்நிலையில் கொல்கத்தாவுடன் நடந்த மேட்சிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் சென்னை அணியை அவர் கொண்டு சென்றிருக்கிறார். அவர் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் படு வைரலாகி இருக்கிறது.

தோனியின் வாசகம்

தோனியின் வாசகம்

தல தோனியின் எளிமை இதுதான் என்பதை எடுத்துக் கூறும் விதமாக இருக்கிறது அந்த புகைப்படம். ஐபிஎல் நேரத்தில் போட்டி முடிந்ததும் காலையில் விமானம் இருந்தால் இதுதான் நடக்கும் என்ற வாசகத்துடன் அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

சாக்ஷியுடன் தோனி

சாக்ஷியுடன் தோனி

அதாவது விமானத்துக்கு கிளம்பியவாறு பையை தலைக்கு வைத்து கீழே வெறும் தரையில் படுத்து உறங்குகிறார் தோனி. அதே பையில் மறுபுறம் தலையை வைத்து தூங்குகிறார் அவரது மனைவி சாக்ஷி. பக்கத்தில் மற்ற வீரர்கள் தங்களது லக்கேஜ்களுடன் உட்கார்ந்திருக்கின்றனர்.

பிரமிப்பு

பிரமிப்பு

இந்த படத்தை லட்சக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். இது தான் தோனி... இதுவே அவரது எளிமை என்று பிரமிப்புடன் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Story first published: Wednesday, April 10, 2019, 12:51 [IST]
Other articles published on Apr 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+