Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் வந்துட்டேன்னு சொல்லு..! களத்தில் தல தோனி.. விசில் சத்தத்தால் விண் அதிர்ந்த சேப்பாக்கம்

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் திரும்பியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 50வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் இப்போட்டியில் இரு அணிகளும் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த ஐபிஎல் சீசனின் சென்னையில் நடைபெறும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்கள் தல தோனி விளையாடுவரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. காரணம் காய்ச்சலாலும், முதுகு வலியினாலும் அவர் அவதிப்பட்டு வந்தார்.

திரும்பி வந்த தல

திரும்பி வந்த தல

இந்நிலையில் 2 போட்டிகளில் விளையாடாத சென்னை அணியின் கேப்டன் தல தோனி மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது ரசிகர்களுக்கு அதிகப்படியான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளார்.

முதலிடம் யாருக்கு?

முதலிடம் யாருக்கு?

போட்டியில் முதலிடம் பெறுவது இரு அணிகளுக்கும் குறிக்கோளாக இருக்கும். அதாவது டெல்லி அணி முதலிடத்தை தக்க வைக்கவும் சென்னை அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்கவும் போராடும் என்பதால் போட்டியில் பரபரப்பு இருக்கும்.

களத்தில் தோனி

களத்தில் தோனி

சென்னை அணிக்கு கேப்டன் தோனி இன்று களமிறங்குகிறார். அதேபோல் டு ப்ளெசிஸ் மற்றும் ஜடேஜா இருவரும் இன்றைய போட்டியில் இடம் பெற்று உள்ளனர். களத்தில் தோனி இருப்பதை கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் எழுப்பிய விசில் சத்தம் விண்ணை பிளந்தது.

போல்ட்டுக்கு வாய்ப்பு

போல்ட்டுக்கு வாய்ப்பு

டெல்லி அணிக்கு இசாந்த் சர்மா மற்றும் ரபாடா இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜகதீசா சுச்சித் மற்றும் ட்ரென் போல்ட் இருவரும் களமிறங்குகின்றனர்.

அணி விவரம்

அணி விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்: ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன் & கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

யார்? யார்?

யார்? யார்?

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள்:ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பன்ட் (கீப்பர்), கொலின் இங்ராம், ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், ஆக்ஸார் படேல், ஜகதீஸ்ஷா சுசித், சந்தீப் லேமிச்சேன், அமித் மிஸ்ரா, ட்ரெண்ட் போல்ட்.

Story first published: Wednesday, May 1, 2019, 20:32 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+