For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பதுங்கி பாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புலி: கிலியில் எதிரணிகள்

By Veera Kumar

சென்னை: பதுங்கிப்பாயும் புலியாக மாறி அடித்து நொறுக்கிக் கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னைன்னாலே புலிதானப்பா என்று ரசிகர்கள் சொல்வது காதில் விழுகிறது.

சொதப்பிடுவாங்களோ..

சொதப்பிடுவாங்களோ..

கேப்டன் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது ஐபிஎல் போட்டியில் தனது முதலாவது ஆட்டத்தை பஞ்சாப் அணியுடன் எதிர்கொண்டது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் ஈசியாக வென்றது. அவ்ளோதான் டோணி தலைமை வீக் ஆகிவிட்டது. இந்த வருட ஐபிஎல்லில் சென்னை கதை முடிந்தது என்று ரசிகர்கள் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டனர்.

பாய்ந்த புலி

பாய்ந்த புலி

'யாரைப்பார்த்து என்ன சொன்னீர்கள்?' என்று உறுமுவது போல இருந்தது, சென்னையின் அடுத்தடுத்த வெற்றிகள். டெல்லி, ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத், இதோ.. நேற்று கொல்கத்தா என சுனாமி அலைபோல அத்தனை அணிகளையும் சுருட்டிப் போட்டுவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

வழக்கம்தான..

வழக்கம்தான..

ஐபிஎல் தொடங்கி 6 சீசன்கள் முடிந்துள்ளன. இதுவரை நடந்த போட்டித்தொடர்கள் அனைத்திலுமே சீராக சிறப்பாக ஆடி வரும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். கடந்த சீசனில் கோப்பையை வென்ற மும்பை இப்போது ஐந்து போட்டியிலும் தோற்று மண்ணை கவ்வியபடி கிடக்கிறது. இதுபோலத்தான் அத்தனை அணிகளுமே. ஒன்று.. ஒரேடியாக நன்கு ஆடுவார்கள். இல்லாவிட்டால் நெடுஞ்சாண் கிடையாய் படுத்துவிடுவார்கள். ஆனால் எப்போதுமே எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும்தான்.

என்ன மாயமோ

என்ன மாயமோ

சொல்லிக்கொள்ளும்படி ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள், அசகாய பவுலர்கள் என எதுவுமே இல்லாமல் சராசரி வீரர்களை வைத்துக்கொண்டு சென்னை போடும் ஆட்டம் இருக்கிறதே, அய்யய்யோ... ஒருவேளை சென்னை அப்டீங்கிற பெயரும், டோணி அண்ணாத்தயோட ராசியும்தான் காரணமாக இருக்குமோ.

இனி அதிரடிதான்..

இனி அதிரடிதான்..

கொல்கத்தா வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த ரவீந்திரஜடேஜா, நாங்கள் சிறப்பாக பேட்டிங், பவுலிங், பீல்டிங் செய்தோம். இனியும் இது தொடரும் என்று காலரை தூக்கிவிட்டபடி சொன்னார். இனி என்ன.. 'சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய விசிலு' அடிக்க வேண்டியதுதானே..

Story first published: Saturday, May 3, 2014, 18:00 [IST]
Other articles published on May 3, 2014
English summary
On a roll having registered their fifth straight victory, Ravindra Jadeja says Chennai Super Kings are confident of maintaining the winning momentum in the ongoing Indian Premier League.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+