Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

ஹைதராபாத்: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப்

டாஸ் வென்ற பஞ்சாப்

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை பேட்டிங்

சென்னை பேட்டிங்

இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 67 ரன்களையும், பிளெஸ்ஸிஸ் 46 ரன்களும், ஜடேஜா 27 ரன்களையும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பி்ற்கு 182 ரன்கள் எடுத்து 183 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

அவானா 4 விக்கெட்டுகள்

அவானா 4 விக்கெட்டுகள்

பஞ்சாப் அணியில் அதிபட்சமாக அவானா 4 விக்கெட்டுகளையும், ஏ.ஆல். படேல் 2 விக்கெட்டுகளையும், பெரீரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சொதப்பிய பஞ்சாப்

சொதப்பிய பஞ்சாப்

பிறகு, களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக படேல் 31 ரன்களும், மில்லர் 22 ரன்களும் சேர்த்தனர். ஆனால், ஷேவாக், மேக்ஸ்வெல் ஆகியோர் எந்த ரன்னும் எடுக்காமல் அவுட்டாகி விட்டனர்.

65 ரன்களில் சென்னை வெற்றி

65 ரன்களில் சென்னை வெற்றி

18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பஞ்சாப் அணி. இதைத்தொடர்ந்து சென்னை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கொல்கத்தாவுடன் மோதுகிறது

கொல்கத்தாவுடன் மோதுகிறது

இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.

Story first published: Friday, October 3, 2014, 12:07 [IST]
Other articles published on Oct 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+