Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீறும் கொல்கத்தாவும், பதுங்கும் சென்னையும் இன்று பலப்பரிட்சை

கொல்கத்தா: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூருக்கு சோதனை

பெங்களூருக்கு சோதனை

ஐ.பி.எல்.-7வது சீசனில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5வது இடத்துடன் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி இருந்தது.

கலைந்த கனவு

கலைந்த கனவு

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. முந்தைய லீக் ஆட்டங்களில் கொல்கத்தா, பஞ்சாப், மும்பை அணிகளிடம் முறையே அடுத்தடுத்து தோல்வி கண்டதன் மூலம் ஐதராபாத் அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து போனது.

அதிரடி சரவெடி

அதிரடி சரவெடி

அதிரடி பேட்ஸ்மேன்களான கெய்ல், டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங் ஆகியோரையும், எக்கனாமிக் பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், முரளிதரன் ஆகியோரையும் உள்ளடக்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது அடுத்த சுற்று வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள முழு வேகத்தையும் களத்தில் காட்டும். பேட்டிங்கில் ஷிகர்தவான், ஆரோன் பிஞ்ச், நமன் ஓஜா, லோகேஷ் ராகுலையும், பவுலிங்கில் ஸ்டெயின், புவனேஷ்வர்குமார், அமித்மிஸ்ரா, டேரன் சமி ஆகியோரையும் நம்பி இருக்கும் ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் தாக்குப்பிடிப்பது கடினமான காரியமாக இருக்கும்.

டோணி-கம்பீர்

டோணி-கம்பீர்

கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் இருப்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பையும் ஏற்கனவே உறுதி செய்து விட்டது. ஆனால் கடந்த சில ஆண்டங்களாக சென்னை உத்வேகத்தை இழந்து பதுங்கி ஆடிவருகிறது. கடைசி லீக் ஆட்டத்தில், பெங்களூரிடம் தோல்வி கண்டு இருந்தது.

சீறும் கொல்கத்தா

சீறும் கொல்கத்தா

கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் தன்னை தக்கவைத்து கொண்டு இருப்பதுடன் வலுவானதாகவும் உருவெடுத்து வருகிறது. சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களை கொண்ட இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 9 முறையும், கொல்கத்தா அணி 4 முறையும் வென்று இருக்கின்றன.

Story first published: Tuesday, May 20, 2014, 16:40 [IST]
Other articles published on May 20, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+