CSK vs SRH: வாட்சன் அதிரடி அரைசதம்… ரெய்னா 38… வெற்றியை நோக்கி நிதானமாக முன்னேறும் சென்னை
Recommended Video
சென்னை:ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் துவக்க விக்கெட்டை இழந்தாலும் சென்னை அணி அதிரடியாகவே ஆடி வருகிறது. தொடக்க வீரர் வாட்சன் அரைசதம் கடந்தார்.
சென்னையில் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்சஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து, களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வார்னர் அபாரமாக ஆடி 57 ரன்கள் குவித்தார். மணிஷ் பாண்டே 83 எடுத்தார்.
176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களில் டுபிளெசிஸ் 1 ரன்னில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர், வந்த சுரேஷ் ரெய்னா, வாட்சனுடன் கை கோர்த்தார்.
இருவரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். ஸ்கோர் 80 ரன்களை எட்டிய போது சின்ன தல ரெய்னா 38 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அபாரமாக ஆடிய வாட்சன் அரைசதம் கடந்தார். 2 தொடர் தோல்விகளுக்கு பிறகான போட்டி என்பதால் சென்னை வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications