Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று ராஜஸ்தானுடன் மோதல் - வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Rajasthan Royals Vs Chennai Super Kings
அகமதாபாத்: தொடர் தோல்வியால் துவண்டு போய்க் கிடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை சந்திக்கிறது.

இன்று சென்னை பங்கேற்கும் போட்டிதான் அந்த அணிக்கு முதல் சுற்றின் கடைசிப் போட்டியாகும். இதுவரை 6 போட்டிகளில் மோதில் 2ல் மட்டுமே வென்று நான்கு தோல்விகளுடன், வெறும் 4 புள்ளிகளுடன் உள்ளது சென்னை.

தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் சென்னை அணி நெருக்கடியில் உள்ளது. இடையில் கேப்டன் டோணிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இல்லாமல் 3 போட்டிகளி்ல ஆடியது சென்னை. இருப்பினும் டோணி திரும்பிய பிறகும் கூட அது தோல்வியைச் சந்தித்தது.

மறுபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் தொடர் தோல்வியைச் சந்தித்தாலும் அடுத்து வரும் போட்டிகளில் அட்டகாசமாக ஆடி வெற்றியைக் குவித்து வருகிறது. முதலில் 3 தோல்விகள், பின்னர் அடுத்தடுத்து 3 வெற்றிகள் என அசத்திக் கொண்டிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

சென்னை அணியில் பேட்டிங்கில் மாத்யூ ஹெய்டன், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் ஆகியோர் சிறப்பாக உள்ளனர். பந்து வீச்சைப் பொறுத்தவரை முரளிதரன் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யூசுப் பதான் அந்த அணிக்கு மிகப் பெரிய பலமாக மாறியுள்ளார். கேப்டன் வார்னேவின் செயல்பாடும் கேப்டன் என்ற முறையில் சிறப்பாகவே உள்ளது.

இரு அணிகளும் ஐபிஎல் தொடர்களில் இதுவரை 5 முறை மோதியுள்ளன. அதில், ராஜஸ்தான் 3 போட்டிகளிலும், சென்னை 2 போட்டிகளிலும் வென்றுள்ளன.

மும்பையை சமாளிக்குமா டெக்கான் சார்ஜர்ஸ்

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இன்னொரு போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி, வலுவான மும்பை இந்தியன்ஸை சந்திக்கிறது.

கேப்டன் டெண்டுல்கர், செளரப் திவாரி, தவன், ஜாகிர்கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கேப்டன் டெண்டுல்கர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நான்கு வெற்றிகளையும், ஒரே ஒரு தோல்வியையும் மட்டுமே சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அசைக்க முடியாத வலுவான அணியாக மாறியுள்ளது.

இன்றைய போட்டி மும்பையில் நடைபெறுவதால், அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என நம்பப்படுகிறது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மறுபக்கம் பலமாகவே காணப்படுகிறது. 3 வெற்றிகளுடன் இந்த அணி மும்பையைச் சந்திக்கிறது. கில்கிறைஸ்ட் தலைமையிலான டெக்கான் அணியின் பலம், சைமண்ட்ஸ், கிப்ஸ், ரோஹித் சர்மா ஆகியோர். வாஸ் பந்து வீச்சு நன்றாக உள்ளது.

இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலத்துடன் உள்ளவை என்பதால் இன்றைய போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+