Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை இன்னும் வீட்டுக்கு அனுப்பலையா? செம கடுப்பில் இருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்… கடும் விளாசல்!

Recommended Video

Chennai Super Kings relased five players

சென்னை : ஐபிஎல் அணிகள் 2020 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை ஒட்டி பல வீரர்களை தங்கள் அணிகளில் இருந்து நீக்கி உள்ளனர்.

அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து வீரர்களை நீக்கியது. கேதார் ஜாதவ் அணியில் தான் இருக்கிறார். அவர் நீக்கப்படவில்லை.

அவரால் தான் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது என்பதை குறிப்பிட்டு, சிஎஸ்கே ரசிகர்கள் அவரை வசை பாடி, அணியை விட்டு நீக்கி இருக்க வேண்டும் என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ் நல்ல ஆல் - ரவுண்டராக 2017-18 ஆண்டுகளில் இந்திய அணியில் இருந்தார். அவர் பங்கேற்ற போட்டிகளில் சிறப்பாக ஆடினார். இந்திய அணியின் முக்கிய வீரராக மாறி வந்தார்.

தொடர் காயங்கள்

தொடர் காயங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற அவர், காயங்களால், 2018 ஐபிஎல் தொடர் மற்றும் இந்திய அணியில் ஆட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். எனினும், 2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் முக்கிய மிடில் ஆர்டர் வீரராக இடம் பெற்றார்.

பார்ம் அவுட் ஆனார்

பார்ம் அவுட் ஆனார்

ஆனால், காயங்களால் அதிக கிரிக்கெட் ஆடாமல் இருந்த ஜாதவ், பார்ம் அவுட் ஆனார். அவர் பேட்டிங் திறன் குறைந்தது. விரைவாக ரன் குவித்து வந்த அவர், கடந்த ஐபிஎல் தொடரில் மிகவும் நிதானமாக ஆடினார். அதனால், பல போட்டிகளில் அணி தோல்வியடைந்ததாக கருதினார்கள் ரசிகர்கள்.

உலகக்கோப்பை சொதப்பல்

உலகக்கோப்பை சொதப்பல்

இந்திய அணியிலும் உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்ற சில போட்டிகளில் படு நிதான ஆட்டம் ஆடி அதிர்ச்சி அளித்தார். அரைசதம் அடித்தாலும் கூட, அவரது நிதான ஆட்டம் கடும் விமர்சனத்தை சந்தித்தது.

சிஎஸ்கே நீக்கவில்லை

சிஎஸ்கே நீக்கவில்லை

இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட உள்ள வீரர்கள் பட்டியலில் கேதார் ஜாதவ் பெயர் இடம் பெறும் என கருதப்பட்டது. ஆனால், அவரை நீக்கவில்லை சிஎஸ்கே அணி. சாம் பில்லிங்க்ஸ், டேவிட் வில்லி, மோஹித் சர்மா, துருவ் ஷோரி, சைதன்யா பிஷ்னோய் நீக்கப்பட்டனர்.

ரசிகர்கள் கோபம்

அதைக் கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். சாம் பில்லிங்க்ஸ் நல்ல வீரர், அவரை நீக்கியதற்கு பதில் ஜாதவ்வை நீக்கி இருக்கலாம் என கூறி உள்ளனர் சிலர்.

விலை அதிகம்

கேதார் ஜாதவ்வின் ஏல விலை 7.8 கோடி ஆகும். அந்த தொகையை கொடுத்து சிஎஸ்கே அணி அவரை தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளது ஏன்? என சிலர் கேட்கின்றனர். அவரை இப்போது நீக்கி விட்டு, ஏலத்தில் அவரை குறைந்த விலைக்கு வாங்கலாம் என கூறி உள்ளனர். பலர் அவரை ஏலத்தில் யாருமே வாங்க மாட்டார்கள் எனவும் கூறி உள்ளனர்.

சந்திரமுகி

கேதார் ஜாதவ் சந்திரமுகி பாம்பு போல எனக் கூறி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு அவர் போட்டுள்ள மீம் உச்சகட்டமாக உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் உதாரணம்

இந்த சிஎஸ்கே அணி தன் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த வாய்ப்பே இல்லை, மும்பை அணி சச்சினை கேப்டன் பதவியில் இருந்து தூக்கக் கூட யோசிக்கவில்லை. அதனால் அணிக்கு நன்மை கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.

நீங்களே வைச்சுக்குங்க

அந்த 7 கோடியை நீங்களே வைச்சுக்கிட்டு சின்னப்பசங்க கூட ஆடுங்க என கோபமாக கூறி இருக்கிறார் ஒரு ரசிகர்.

Story first published: Friday, November 15, 2019, 19:45 [IST]
Other articles published on Nov 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+