Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீயாய் வேலை செய்த 'கே.பி'.... ஆனால் கூலாக 'பீப்பி' ஊதிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் நேற்று அபாரமாக களப் பணியாற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் படு கூலாக வெற்றியைப் பெற்று அசத்தி விட்டது. குறிப்பாக டெல்லி கேப்டன் கெவின் பீ்ட்டர்சனின் அதி சுறுசுறுப்பான பீல்டிங் வியூகம், பவுலிங் உத்திகளையும் தாண்டி சென்னை அணி பெரிய ஸ்கோரை சேஸ் செய்து சீரிய வெற்றியை, தொடர்ச்சியான 6வது வெற்றியைப் பெற்று ரசிகர்களைக் குளிர்வித்து விட்டது.

வேயன் ஸ்மித் போட்ட போட்டைத் தடுக்க முடியாமல் டெல்லி அணி திணறிப் போய் விட்டது. அவரது அதிரடி சரவெடி ரன் குவிப்பால் சென்னைக்கு வெற்றி எளிதானது.

முன்னதாக டெல்லி அணியின் பேட்டிங் சீர்குலைந்த போதிலும் திணேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் சேர்ந்து அதை சரிக்கட்டினர். கடைசியில் டுமினியின் மின்னல் வேக ஆட்டத்தால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டியது. ஆனாலும் சென்னையின் சிறப்பான பேட்டிங்கால் அந்த பெரிய ஸ்கோர் சிறுமையாகிப் போனது.

எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2வது பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சேசிங்கை சிறப்பாக செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வழக்கம் போல டோணி

வழக்கம் போல டோணி

வழக்கம் போல கேப்டன் டோணியே வெற்றிக்குத் தேவையான ரன்களை எட்டிப் பிடித்து சிறப்பாக முடிவுரை எழுதினார்.

அடின்னா ஸ்மித் அடி...

அடின்னா ஸ்மித் அடி...

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வேயன் ஸ்மித்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போய் விட்டனர் டெல்லி பந்து வீச்சாளர்கள். போட்ட பந்தையெல்லாம் பொளந்து கட்டினார் ஸ்மித். அபாரமாக ஆடிய அவர் 79 ரன்களைக் குவித்து விட்டுத்தான் வெளியேறினார்.

6வது தொடர் வெற்றி

6வது தொடர் வெற்றி

இதுவரை ஆடிய 7 போட்டிகளில் முதல் போட்டியில் மட்டுமே சென்னை அணி சுதாரிப்பில்லாமல் தோற்றுப் போனது. ஆனால் அடுத்து ஆடிய 6 போட்டிகளிலும் அது கலக்கலாக வென்று அசத்தியுள்ளது.

179 ரன் டார்கெட்

179 ரன் டார்கெட்

முன்னதாக பேட் செய்த டெல்லி அணி 178 ரன்களைக் குவித்தது. இதனால் 179 என்ற கடினமான இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்கையில் சென்னை அணி எட்டியது.

8 சிக்ஸர்களுடன் 79 குவித்த ஸ்மித்

8 சிக்ஸர்களுடன் 79 குவித்த ஸ்மித்

வேயன் ஸ்மித் 51 பந்துகளைச் சந்தித்து 8 சிக்ஸர்கள், நான்கு பவுண்டரிகளுடன் 79 ரன்களைக் குவித்தார்.

19வது ஓவரில்தான் வெளியேறினார்

19வது ஓவரில்தான் வெளியேறினார்

தொடக்கம் முதலே டெல்லியை துவம்சம் செய்து வந்த ஸ்மித் 19வத ஓவரில்தான் அவுட்டாகிப் போனார். அதன் பிறகாவது டெல்லிக்கு காற்று வந்ததா என்றால் அதுதான் இல்லை.. அப்போது சென்னை அணி 8 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான நிலைக்குப போயிருந்தது.

பென்டாஸ்டிக் பினிஷர்...

பென்டாஸ்டிக் பினிஷர்...

கடைசியில் டோணி வந்து தான் ஒரு பென்டாஸ்டிக் பினிஷர் என்பதை நிரூபித்தார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி மற்றும் 2 ரன்களை எடுத்து அணியைக் கரை சேர்த்தார் டோணி.

சுறுசுறுப்பான சுரேஷ் ரெய்னா

சுறுசுறுப்பான சுரேஷ் ரெய்னா

முன்னதாக சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடி 26 பந்துகளில் 47 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல பிரன்டன் மெக்கல்லமும் 32 ரன்களைக் குவித்தார்.

சிலிர்க்க வைத்த திணேஷ் கார்த்திக் - முரளி விஜய்

சிலிர்க்க வைத்த திணேஷ் கார்த்திக் - முரளி விஜய்

முன்னதாக டெல்லி அணியின் பேட்டிங்கின்போது திணேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் இணைந்து மிரட்டலாக ஆடினர். இருவரு சேர்ந்து 71 ரன்களைக் குவித்தனர். விஜய் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். திணேஷ் கார்த்திக் 51 ரன்களைக் குவித்தார்.

சூப்பர்ப் பினிஷிங்..

சூப்பர்ப் பினிஷிங்..

அதேபோல கடைசியில் டுமினி 28 ரன்களையும், கேதர் ஜாதவ் 29 ரன்களையும் குவித்து டெல்லி அணி 178 என்ற பெரிய ஸ்கோரை எட்ட உதவினர்.

கேபியின் சுறுசுறுப்பு வீணாகிப் போனதே

கேபியின் சுறுசுறுப்பு வீணாகிப் போனதே

நேற்று டெல்லி அணியின் பீல்டிங்கின்போது கேப்டன் கெவின் பீட்டர்சன் படு சுறுசுறுப்பாக செயல்பட்டார். பீல்டிங், பவுலிங் வியூகங்களை மெனக்கெட்டு அமைத்தார். வீரர்களை உற்சாகப்படுத்தினார், தட்டிக் கொடுத்து வேலை வாங்கினார். ஆனால் சென்னை வீரர்கள் அதைத் தவிடுபொடியாக்கி விட்டனர்.

Story first published: Tuesday, May 6, 2014, 12:34 [IST]
Other articles published on May 6, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+