பவுலர்களை மிரட்டிய சின்ன தல ரெய்னா.. பயிற்சி ஆட்டத்தில் சூப்பரான அரைசதம்
சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தில் சின்ன தல சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்து அசத்தி உள்ளார்.
2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. மே 30ல் இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், அதற்கு முன்னதாக ஐபிஎல், தொடரை முடிக்க வேண்டி உள்ளது.

சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பெங்களூரை எதிர்கொள்கிறது. அதற்கான டிக்கெட்டுகளும் ஒரே நாளில் விற்று தீர்ந்தன.
அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை அணி வீரர்களுக்கான பயிற்சி போட்டியில் சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்துள்ளார். போட்டியை காண 10,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா அருமையாக விளையாடினால், 4 சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அவர் உலக கோப்பை தொடரில் இடம்பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.


Click it and Unblock the Notifications