For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே.. ஓடிப் பிடித்து.. கலர் கலராக பூசி.. இது சிஎஸ்கே ஹோலி!

சென்னை : சென்னையில் ஹோலி பண்டிகை களைகட்டிய நிலையில், தாங்களும் அதற்கு சளைத்தவர்களல்ல என்று சிஎஸ்கே வீரர்கள் நிரூபித்தனர். அவர்களின் ஹோலி கொண்டாட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே உற்சாகத் தீயை பற்ற வைத்தது.

Recommended Video

IPL 2020 | Dhoni featuring Chennai Super Kings new ad goes viral

சிஎஸ்கேவின் ரெய்னா, முரளி விஜய், சாய் கிஷோர், புதிதாக சேர்க்கப்பட்ட ஜெகதீசன் ஆகியோர் தங்களுக்குள் மட்டுமின்றி மற்ற வீரர்களுக்கும் ஹோலி பண்டிகையின் உற்சாகத்தை கலர் பொடிகளின் மூலம் கடத்தினர்.

Chennai Super Kings Players Celebrates Holi

சிஎஸ்கே வீரர்களின் ஒவ்வொரு நிகழ்வையும் வெற்றிக் கொண்டாட்டத்தின் அடுத்தடுத்த படியாக கருதி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுவரும் சிஎஸ்கே அணி, இந்த நிகழ்வையும் கொண்டாட்டமாகவே பதிவிட்டது.

ஹோலி பண்டிகை நாடெங்கும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் பீதி ஒருபுறம் இருந்தாலும், ஹோலி கொண்டாட்டத்தை யாரும் அதிகளவில் விட்டுக் கொடுக்கவில்லை. சென்னையிலும் கடந்த சில வருடங்களில் இந்த கொண்டாட்டம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிஎஸ்கே வீரர்கள், தாங்களும் கொண்டாட்டத்திற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தனர்.

Chennai Super Kings Players Celebrates Holi

சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று பயிற்சியை முடித்துக் கொண்ட சிஎஸ்கே வீரர்கள், ரெய்னா, முரளி விஜய், சாய் கிஷோர் மற்றும் ஜெகதீசன் ஆகியோர், தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் கலர்பொடிகளை தூவி ஹோலியை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் துரத்தி சென்று கலர் பொடிகளை தூவிய காட்சிகளையும் காண முடிந்தது. இதை வீடியோவாக சிஎஸ்கே அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முன்னதாக வீரர்களின் ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தையும் வெளியிட்டது சிஎஸ்கே.

Chennai Super Kings Players Celebrates Holi

சிஎஸ்கேவின் பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி தான் துவங்க உள்ளது. ஆயினும் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு தங்களது பயிற்சியை முன்னதாகவே துவங்கியுள்ளனர் சிஎஸ்கே வீரர்கள். கடந்த சில தினங்களாக அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்களை பயிற்சியில் காண முடிந்தது. அவர்களை காண ரசிகர்களும் திருவிழா கூட்டமாக மைதானத்தில் கூடினர்.

இந்நிலையில் ஹோலி திருவிழாவை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக ஹோலி ஸ்பெஷல் வீடியோவாக மற்றொரு வீடியோவையும் சிஎஸ்கே பதிவிட்டிருந்தது. அதில் சிஎஸ்கேவின் மஞ்சள் நிற வண்ணங்கள் ஒவ்வொரு அதிரடி பந்துவீச்சு, பேட்டிங்கில் எதிரொலித்தது.

Story first published: Wednesday, March 11, 2020, 16:01 [IST]
Other articles published on Mar 11, 2020
English summary
CSK Players Celebrates Holi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+