Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

VIDEO:டொக்கு வச்சா மொக்கப் ப்ளேயரு, டக்கு பவுலருக்கு பேபி ஓவரு.. வைரலாகும் சிஎஸ்கே வீரர்களின் பாடல்

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழில் பாடிய 'ராப் சாங்' வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பட்டியலில் மூன்று இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

4வது அணி எது என்பது விரைவில் தெரிந்துவிடும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில், சிஎஸ்கே வீரர்கள் தமிழில் பாடல் ஒன்றை பாடியுள்ளனர். அந்த ராப் பாடல் தற்போது இணையத்தில் வைரல் பாடலாக மாறியிருக்கிறது.

கல்லி கிரிக்கெட்

தெருவோரங்களில் விளையாடப்படும் கல்லி கிரிக்கெட் குறித்து வீரர்கள் பாடும் வீடியோ சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த பாடல் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மொத்தம் ஒன்றரை நிமிடங்களே ஓடும் இந்த பாடல் சூப்பராக கிரியேட் செய்யப்பட்டிருக்கிறது.

கலக்கல் சிஎஸ்கே

கலக்கல் சிஎஸ்கே

தமிழை உச்சரிக்க அவர்கள் சிரமப்படுவது, பாடலின் போது சென்னை ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு நடமாடுவது என ஏக சேஷ்டைகளுடன் அந்த பாடல் வெளி வந்திருக்கிறது. தடுமாறி தமிழை உச்சரித்தபடி பிராவோ, ரெய்னா, தாஹிர் என ஒட்டு மொத்த டீமும் இந்த பாடலில் கலக்கி இருக்கிறது.

சென்னைவாசிகள்

சென்னைவாசிகள்

இந்த பாடலை பார்க்கும் போது, கூடிய சீக்கிரத்தில் சிஎஸ்கேவில் இருக்கும் வீரர்கள் அனைவரும் சென்னைக்கே குடி வந்தாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு சென்னை வாசிகளாகவே மாறி இருக்கின்றனர். தோனி என்று கூப்பிடாமல் தல என்று அழைக்கின்றனர். ஹர்பஜனோ தமிழ் புலவராகவே மாறி போயிருக்கிறார்.

ஏக சுவாரசியம்

ஏக சுவாரசியம்

சிலம்பம் சுத்துவது, தோசை சுடுவது, சென்னையில் பில்டர் காபியை போடுவது, தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடுவது என அனைவருக்கும் சென்னை பிடித்து போய்விட்டது. தற்போது சென்னை ராப் பாடலை பயிற்சி செய்து பாடிய வீடியோ டாப். டொக்கு வச்சா மொக்கப் ப்ளேயரு, டக்கு பௌலருக்கு பேபி ஓவரு என்று தொடங்கும் இந்த ராப் பாடலை வீரர்கள் வாயில் நுழையாமல் பாடும் சிரமத்தைப் பார்க்க ஏக சுவாரஸ்யம்.

Story first published: Saturday, May 4, 2019, 19:35 [IST]
Other articles published on May 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+