For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிரடி நீக்கம்.. எல்லோரும் நல்லபடியா போயிட்டு வாங்க.. 5 வீரர்களை வழியனுப்பி வைத்த சிஎஸ்கே!

Recommended Video

Chennai Super Kings relased five players

சென்னை : 2020 ஐபிஎல் தொடருக்கான அணியில் இருந்து ஐந்து வீரர்களை நீக்கி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் மாற்றம் செய்துள்ளன.

சிஎஸ்கே அணியால் நீக்கப்பட்ட அந்த ஐந்து வீரர்களும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் இடம் பெறுவார்கள்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே தங்கள் அணியில் நீண்ட காலமாக இருக்கும் வீரர்களை விட்டுக் கொடுத்ததில்லை. அவர்கள் பார்ம் அவுட் ஆனால் கூட அவர்களை ஆதரித்து சிறப்பாக ஆட வைப்பார் கேப்டன் தோனி.

நீக்கம் பற்றிய வதந்தி

நீக்கம் பற்றிய வதந்தி

இந்த நிலையில், அந்த அணியில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் நீக்கப்படலாம் என்ற செய்தி வலம் வந்தது. ஆனால், அது உண்மை இல்லை என தற்போது சிஎஸ்கே அணி அறிவித்துள்ள ஐந்து வீரர்கள் விடுவிப்பு பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.

மோஹித் சர்மா ஏன்?

சிஎஸ்கே அணி நீக்கி இருக்கும் முக்கிய வீரர்களில் ஒருவர் மோஹித் சர்மா. கடந்த ஆண்டு ஏலத்தில் 5 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த வேகப் பந்துவீச்சாளர். சிஎஸ்கே அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறை இருந்ததால் தான் வாங்கப்பட்டார்.

ஆடவில்லை

ஆடவில்லை

எனினும், அவர் காயத்துடன் தான் அணிக்கு வந்தார். 2019 ஐபிஎல் தொடர் முடியும் வரை அவரால் ஒரு போட்டியில் கூட ஆட முடியவில்லை. இத்தனைக்கும், சிஎஸ்கே அணியில் சர்வதேச வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையே கடந்த சீசனில் நீடித்தது. அதனால், மோஹித் சர்மாவை நீக்கி இருக்கிறது சிஎஸ்கே.

டேவிட் வில்லி

டேவிட் வில்லி

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டேவிட் வில்லி கடந்த சீசனில் கடைசி நேரத்தில் தான் விலகிக் கொள்வதாக கூறி அதிர்ச்சி அளித்தார். அது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

சாம் பில்லிங்க்ஸ்

சாம் பில்லிங்க்ஸ்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்க்ஸ் 2018 சீசனில் அதிக போட்டிகளில் ஆடினார். கடந்த சீசனில் அவர் சில போட்டிகளில் மட்டுமே இடம் பெற்றார். தற்போது அவரை நீக்க முடிவு செய்துள்ளது சிஎஸ்கே.

இரண்டு உள்ளூர் வீரர்கள்

இரண்டு உள்ளூர் வீரர்கள்

துருவ் ஷோரி மற்றும் சைதன்யா பிஷ்னோய் ஆகிய இரு உள்ளூர் வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். துருவ் ஷோரி சிறந்த பீல்டர் என அறியப்படுபவர். அவர் கடந்த சீசனில் ஒரு போட்டியில் ஆடி இருந்தார். இவர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் விலை

வீரர்கள் விலை

நீக்கப்பட்ட வீரர்களின் விலை - மோஹித் சர்மா - 5 கோடி, டேவிட் வில்லி - 2 கோடி, சாம் பில்லிங்க்ஸ் - 1 கோடி, துருவ் ஷோரி - 20 லட்சம், சைதன்யா பிஷ்னோய் - 20 லட்சம்.

கையில் பணம்

இவர்களை நீக்கியதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 8.4 கோடி கிடைத்துள்ளது. ஏற்கனவே, மீதம் இருக்கும் 3.2 கோடி மற்றும் இந்த ஆண்டு ஏலத்துக்கான 3 கோடி என மொத்தமாக 14.6 கோடி ரூபாய் கையிருப்பு வைத்துள்ளது சென்னை அணி.

யாருக்கு குறி?

யாருக்கு குறி?

டிசம்பர் 19 அன்று நடைபெற உள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், சிஎஸ்கே அணி சாம் பில்லிங்க்ஸ்-க்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பர், மற்றும் இரண்டு சர்வதேச அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, November 15, 2019, 19:03 [IST]
Other articles published on Nov 15, 2019
English summary
Chennai Super Kings relased five players ahead of IPL 2020 auction. Here is the complete list with price.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+