நைஸ் மீட்டிங் யூ..! வம்பிழுத்து சரண்டரான கொல்கத்தாவுக்கு சிஎஸ்கே பதிலடி
சென்னை: சவால் விட்ட கொல்கத்தா அணிக்கு, சிஎஸ்கே ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் தோனி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடப்பு தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படுவது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் தான். இந்த போட்டிக்கு தான் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ரசலின் காட்டடியில் வென்ற கொல்கத்தா அணி ஒரு டுவீட்டை வெளியிட்டு இருந்தது. மூன்று நாட்களில் சந்திப்போம்' என ட்வீட் செய்து சவாலும் விடுத்திருந்தது.
நமக்குள்ள சாரி, தேங்க்ஸ்.. வேணாம்ங்க... ஒரு கப் காபி போதும் ... ஆஹா குஷ்பூ ரொமான்ஸ்!

சென்னை வெற்றி
இதையடுத்து இந்த அணிகள் மோதும் போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. போட்டியும் நடந்து முடிந்தது. கொல்கத்தாவை தமது பந்துவீச்சில் சுருட்டிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றது.
டுவிட்டர் பதிவு
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக காட்டடி நாயகன் ரசல், 50 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பி தள்ளினர். வெற்றிக்கு பிறகு கொல்கத்தாவுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடியாக ஒரு பதிவை போட்டுள்ளது.

நைஸ் மீட்டிங்
அதன்படி, கொல்கத்தா அணி சவால்விட்ட டுவிட்டிற்கு நைஸ் மீட்டிங் யூ என ட்விட் செய்து சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது. இந்த சம்பவம் சென்னை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதான் பதிலடி
இது குறித்து சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னை அணியை வம்பிழுத்து கொல்கத்தா தோற்றிருப்பதாகவும், வம்பிழுக்கும் எந்த அணிக்கும் இது ஒரு பாடம் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications