Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிடிவாதமாக நின்ற தோனி.. சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்.. தக்கவைக்கப்படும் வீரர்கள் பட்டியல் இதோ!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023ம் ஆண்டுக்காக தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்கி வருகின்றன.

அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய முடிவுகளை தோனி எடுத்துள்ளார்.

 ஜடேஜாவின் நிலை

ஜடேஜாவின் நிலை

அதன்படி கடந்தாண்டு சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட ரவீந்திர ஜடேஜா வேறு அணிக்கு சென்றுவிடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்காக தோனி துணை நின்றுள்ளதால் மீண்டும் சிஎஸ்கேவில் தான் இருப்பார் எனக் கூறப்பட்டிருக்கிறது. பெரிய வீரர்களை விடமாட்டோம் என அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதனே கூறியிருந்தார்.

வெளியேறும் வீரர்கள்

வெளியேறும் வீரர்கள்

சென்னை அணியில் இருந்து மொத்தம் 10 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 5 வீரர்கள் வெளியேற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்களான கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, நாராயண் ஜகதீசன், மிட்சல் சாண்ட்னர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மூத்த வீரரான ராபின் உத்தப்பா ஓய்வை அறிவித்ததால் அவரும் இந்த பட்டியலில் தான் சேர்க்கப்படுவார்.

தக்கவைக்கப்படும் வீரர்கள்

தக்கவைக்கப்படும் வீரர்கள்

தோனி, ஜடேஜா, டெவோன் கான்வே, தீபக் சஹார், டுவைன் பிரிட்டோரிய்ஸ், மஹீசா தீக்‌ஷனா, டுவைன் பிராவோ, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, முகேஷ் சொளத்ரி

Story first published: Tuesday, November 15, 2022, 14:30 [IST]
Other articles published on Nov 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+