Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சப்போர்ட் பண்ணிய உங்க எல்லாத்துக்கும் நன்றி… வேட்டை தொடரும்.. ! டுவிட்டரில் சேதி சொன்ன சிஎஸ்கே

சென்னை: ஐபிஎல் தொடரில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமது ட்விட்டர் பக்கத்தில் செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்களை கட்டி போட்டியிருந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்திருக்கிறது. பைனலில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, மும்பை கோப்பையை தட்டிச் சென்றது. மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியிலும், சென்னை ரசிகர்கள் சோகத்திலும் இருக்கின்றனர்.

Chennai super kings says thanks to everyone who are all supported throughout the ipl

இனி அடுத்து உலக கோப்பை தொடர் தான்... கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த டார்கெட். வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. கலந்து கொள்ளும் நாடுகள் தங்களின் வீரர்களின் பட்டியலை அறிவித்துவிட்டன. இந்தியாவும் வெகு விரைவில் இங்கிலாந்து பயணம் மேற் கொள்கிறது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பான பதிவை தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:

எல்லாருக்கும் ஹாய்...!! இந்த செய்தி ஆதரவளித்த உங்க எல்லோருக்கும் தான். நடந்ததை நம்புங்கள். எந்த சூழ்நிலையிலும் ஏற்ற, இறக்கங்கள் வந்த போது... அவை கடினமான வையாக இருந்தபோதும் சரி... நாங்க எப்படி விளையாடினோமோ அதற்கு எல்லாம் நீங்க தான் காரணம்.

உங்களால தான் எங்களால இந்த அளவுக்கு வர முடிந்தது. எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. எங்களின் வேட்டை தொடரும்... அது எதுவாக இருந்தாலும்... விசில் போடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, May 13, 2019, 17:58 [IST]
Other articles published on May 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+