CSK vs KXIP: 160 ரன்களை குவித்த சென்னை... கடைசி 3 ஓவர்களில் தோனி அதிரடி... 44 ரன்கள் விளாசல்
Recommended Video

சென்னை: பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய சென்னை அணி ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதிலும்... 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எடுத்துள்ளது.
சேப்பாக்கத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் களம் கண்டுள்ளன. கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து உள்ளதால் இந்த போட்டி அந்த அணிக்கு முக்கிய போட்டியாகும்.
டாசில் சென்னை அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளெசிஸ்சும் களம் இறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்து வைடானது. அந்த ஓவரில் 4 ரன்கள் தான் கிடைத்தன. அதனை தொடர்ந்து சென்னை அணி மெதுவாகவே ரன்களை சேர்க்க தொடங்கியது.

மெதுவாக ரன் சேர்ப்பு
தொடக்கத்தில் மெதுவாக ரன்களை சேர்க்க தொடங்கினர் சென்னை வீரர்கள். ஆகையால் ரன்கள் ஒரே சீராக வர ஆரம்பித்தன. முதல் விக்கெட்டை கைப்பற்றும் முயற்சியில் பஞ்சாப் அணியினரும் பந்துவீசினர்.

வாட்சன் ஆட்டமிழப்பு
அதற்கு 8வது ஓவரில் பலன் கிடைத்தது. வாட்சன் அஸ்வினின் பந்தை தூக்கி அடிக்க முற்பட்ட வாட்சன் கேட்சாகி ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 56 ரன்கள்.

54 ரன்கள்
அதன்பிறகு 2வது விக்கெட்டுக்கு ரெய்னா கை கோர்த்தார். இருவரும் வழக்கம்போல நிதானமாக ஆடினர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த டு பிளெசிஸ் அரை சதம் கடந்தார்.

டு பிளெசிஸ் ஆட்டமிழப்பு
ஆட்டம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் 14வது ஓவரை வீசிய அஸ்வின் பந்தில் பலன் கிடைத்தது. 54 ரன்கள் எடுத்திருந்த டு பிளெசிஸ் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து 2 பேர் அவுட்
இதையடுத்து, களத்துக்கு வந்தவர் தல தோனி. ரெய்னாவும், இவரும் பின்னி எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அடுத்த பந்திலேயே ரெய்னா போல்டானார். 2 பந்துகளில் அடுத்தடுத்து அவுட் என்பதால் என்ன நடக்குது என்று தெரியாமலேயே சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறைவான ரன்கள்
அதன்பிறகு, தோனியுடன் ராயுடு கை கோர்த்தார். ரன்கள் ஜெட் வேகத்தக்கு பதிலாக மெதுவாக வந்தன. கிடைத்த பந்துகளை அடித்து இருவரும் ரன்களை சேர்த்தனர்.

ரன்கள் இலக்கு
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக டு பிளெசிஸ் 54 ரன்கள் குவித்திருந்தார். இதனையடுத்து, 161 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் களம் இறங்குகிறது.


Click it and Unblock the Notifications