Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KXIP vs CSK: பஞ்சாபை தெறிக்கவிட்ட டுபிளெசிஸ்… 4 ரன்களில் சதத்தை இழந்தார்… சென்னை அணி 170/5

Recommended Video

சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாபி அணி

சண்டிகர்:பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டுபெளசிஸ் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி 170 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடர் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. மொகாலி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

பஞ்சாப் அணி ஒரு மாற்றத்துடன் மாற்றத்துடன் களமிறங்குகிறது. ஹர்ப்ரீத் ப்ரார் உள்ளே வருகிறார். சென்னை அணி வழக்கம்போல எவ்வித மாற்றமும் இன்றி, களமிறங்கியது. சென்னை அணியின் சார்பில் டுபௌசிஸ், ஷேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ரெய்னா 53 ரன்கள்

ரெய்னா 53 ரன்கள்

வாட்சன் 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய ரெய்னா - டுபௌசிஸ் ஜோடி நிதானமாக ஆடினர். ரெய்னா 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் டுபௌசிஸ் பஞ்சாப் பந்துகளை தெறிக்க விட்டார்.

4 ரன்களில் இழந்தார்

4 ரன்களில் இழந்தார்

எந்த பந்து கிடைத்தாலும்... அந்த பந்தை ஒரு கை பார்த்தார் என்றே சொல்லலாம். 55 பந்துகளை எதிர்கொண்ட அவர் 96 ரன்கள் குவித்தார். வெறும் 4 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்ட அவர், கர்ரன் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

வந்த வேகத்தில் வெளியேற்றம்

வந்த வேகத்தில் வெளியேற்றம்

அதற்கு அடுத்ததாக தல தோனி களத்துக்கு வந்தார். 10 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இணைந்த அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய சென்னை 200 ரன்களை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் முயற்சி

பஞ்சாப் முயற்சி

சென்னை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதனால், இன்றைய போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் மட்டுமே கிடைக்கும். அதே போல, பஞ்சாப் அணியும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும் ஆட்டத்தை வெல்ல பஞ்சாப் அணி போராடும்.

Story first published: Sunday, May 5, 2019, 18:20 [IST]
Other articles published on May 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+