CSK vs KXIP: நிதான ஆட்டத்தை தொடர்ந்தது சென்னை.. 26 ரன்களில் வாட்சன் அவுட்
சென்னை: பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் களமிறங்கி உள்ள சென்னை அணி நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. 26 ரன்கள் எடுத்திருந்த வாட்சன், அஸ்வின் பந்தில் வீழ்ந்தார்.
சேப்பாக்கத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் களம் கண்டுள்ளன. சென்னை இது மிக முக்கிய போட்டியாகும். ஏன் என்றால்.. கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது.
பஞ்சாப் அணிக்கும் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும். இதையடுத்து, டாசில் சென்னை அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை தொடக்கம்
தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளெசிஸ்சும் களம் இறங்கினர். தொடக்க ஓவர்களில் சென்னை அணிக்கு குறைவான ரன்களே கிடைத்தன. முதல் ஓவரின் முதல் பந்து வைடானது. அந்த ஓவரில் 4 ரன்கள் தான் கிடைத்தன.

3வது ஓவரில் முதல் பவுண்டரி
2வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியின் பவுண்டரி கணக்கை துவக்கி வைத்தார் வாட்சன். அதன்பிறகு கிடைக்கின்ற பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தனர்.

5வது ஓவரில் 18 ரன்கள்
5வது ஓவரில் சென்னை அணிக்கு அதிக ரன்கள் கிடைத்தது. அந்த ஓவரில் மட்டும் சென்னை அணி 18 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ஓவர்களிலும் ரன்கள் குவிய ஆரம்பித்தன. 6 ஓவர்கள் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது.

வாட்சன் ஆட்டமிழப்பு
விக்கெட்டை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற வேட்கையுடன் பஞ்சாப் ஆடியது, நன்றாகவே தெரிந்தது. அதற்கான பலனும் கிடைத்தது. 8வது ஓவரில் அஸ்வினின் பந்தை தூக்கி அடிக்க முற்பட்ட வாட்சன் கேட்சாகி ஆட்டமிழந்தார்.

மிகப்பெரிய ஸ்கோர்
தொடக்கத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை சென்னை அணி தேர்ந்தெடுத்து உள்ளது. எனவே, மிகப்பெரிய ஸ்கோரை எட்டினால் எளிதாக வெற்றி பெறலாம் என்று சென்னை ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications