Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: 4 வருஷம் தான் பிளே ஆஃப் போகலை.. மிரள வைக்கும் சிஎஸ்கே அணியின் சாதனைப் பட்டியல்

சென்னை: சிஎஸ்கே அணி தனது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 16 ஆண்டு ஐபிஎல் தொடர்களில் விளையாடி, அதில் 4 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்துள்ளது. மற்றபடி 12 முறை பிளே ஆஃப் மற்றும் 10 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி மிரள வைத்துள்ளது. ஐபிஎல் அரங்கில் சிஎஸ்கே படைத்துள்ள முக்கிய சாதனைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஐபிஎல் கோப்பைகள்: 5 முறை
  • இறுதிப்போட்டி: 10 முறை
  • பிளே ஆஃப்: 12 முறை
  • மொத்த போட்டிகள்: 253 போட்டிகளில் 142 வெற்றி, 109 தோல்வி, 2 டிரா
  • அதிகபட்ச ஸ்கோர்: 246/5 ரன்கள்
  • குறைந்தபட்ச ஸ்கோர்: 79 ரன்கள்
  • மிகப்பெரிய வெற்றி: 97 ரன்கள் வித்தியாசத்தில்
  • ஒரு சீசனில் அதிக ரன்கள்: மைக்கேல் ஹஸ்ஸி (733 ரன்கள்)
  • ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள்: எம்.எஸ் தோனி (4865 ரன்கள்)
  • அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: முரளி விஜய் (127 ரன்கள்)
  • அதிக சதங்கள்: ருதுராஜ் கெய்க்வாட், ஷேன் வாட்சன், முரளி விஜய் தலா 2 சதங்கள்
  • அதிக அரைசதங்கள்: சுரேஷ் ரெய்னா 33 அரைசதங்கள்
  • சிறந்த ஸ்ட்ரைக் ரேட்: சிவம் துபே 151.6
  • அதிக சிக்ஸர்கள்: எம்.எஸ் தோனி 234 சிக்ஸர்கள்
  • அதிக விக்கெட்டுகள்: ரவீந்திர ஜடேஜா 143 விக்கெட்டுகள்
  • ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள்: டுவைன் பிராவோ 32 விக்கெட்டுகள்
  • சிறந்த பந்துவீச்சு: ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுக்கு 5 விக்கெட்
  • விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிஸல்கள்: எம்.எஸ் தோனி 176
  • அதிக கேட்சுகள்: சுரேஷ் ரெய்னா 98 கேட்சுகள்
  • சிறந்த பார்ட்னர்ஷிப்: டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 182 ரன்கள்
  • அதிக போட்டிகளில் கேப்டன்: எம்.எஸ் தோனி 221 போட்டிகள் 131 வெற்றி
Chennai Super Kings Stats in IPL history CSK s play-off qualification highest score and player records

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2025 சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இதனால் 2026 தொடருக்கான ஏலத்தில் 9 புதிய வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தியுள்ளது. முக்கியமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. இதற்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை சிஎஸ்கே விட்டுக்கொடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்த 2026 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சாம்சன், சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் ருதுராஜ் கெய்க்வாட், டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, நூர் அகமது மற்றும் தோனி ஆகியோர் முக்கிய வீரர்களாக களம் காண உள்ளனர்.

Story first published: Sunday, March 22, 2026, 16:48 [IST]
Other articles published on Mar 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+