Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக் டி20: முதல் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா அணிகள் மோதல்

ஹைதராபாத்: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் பிரதான போட்டி இன்று துவங்குகிறது. முதல் நாளிலேயே பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் முதல் போட்டியில் மல்லுக்கட்டப்போகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டு பிளெசிஸ் சென்னை அணியில் இருப்பது அணிக்கு பெரும் பலத்தை அளித்துள்ளது.

Chennai Super Kings take on Kolkata in Champions League T20 opener

6வது சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ஹைதராபாத், சண்டிகர், ராய்ப்பூர், பெங்களூர் ஆகிய 4 நகரங்களில் நடக்க உள்ளது. இதில் பிரதான சுற்றில் விளையாட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்தன. தகுதி சுற்றில் வெற்றி பெற்ற லாகூர் லையன்ஸ் மற்றும் நார்தன் அணிகளுடன் சேர்த்து மொத்தம் 10 அணிகள் பிரதான சுற்றில் களம் காண்க உள்ளன.

முதல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின்போது நைட் ரைடர்ஸ் அணிக்கும், சென்னை அணியுக்குமான போட்டிகளில் அனல் பறந்தது. அதே போன்று சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கடுமையான மோதல் நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.

சென்னை அணி உத்தேச பட்டியல்: டிவேன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம், பப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, டோணி, டிவேன் பிராவோ, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மோகித் ஷர்மா, ஆஷிஷ் நெக்ரா.

கொல்கத்தா அணியின் உத்தேச பட்டியல்: ராபின் உத்தப்பா, கவுதம் கம்பீர், ஜேக்கஸ் கல்லீஸ், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்ய குமார் யாதவ், அண்ட்ரே ரஸ்சல், சுனில் நரைன், பியூஸ் சாவ்லா, வினய்குமார், உமேஷ் யாதவ்.

கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா தனது ஐபிஎல் அதிரடியை தொடருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 660 ரன்களை குவித்தவர் ராபின் உத்தப்பா.

அதே நேரம் சென்னையின் பேட்டிங் வரிசைக்கு டு பிளெசிஸ் முதுகெலும்பாக இருப்பார். சமீபத்தில் நடந்து முடிந்த தெ.ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு நடுவேயான முத்தரப்பு போட்டியில் டு பிளெசிஸ் 3 சதங்கள் அடித்து அசத்தினார்.

மேலும் அந்த தொடரில், 464 ரன்கள் குவித்ததுடன் 92.8 ரன் என்ற சராசரியை வைத்துள்ளார்.

Story first published: Wednesday, September 17, 2014, 15:51 [IST]
Other articles published on Sep 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+