Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இன்று சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்!

பெங்களூர்: 6வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று இறுதிப் போட்டி

இன்று இறுதிப் போட்டி

கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்க பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐ.பி.எல்.நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், சுரேஷ்ரெய்னா, டுபிளிஸ்சிஸ், ரவீந்திர ஜடேஜா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ராபின் உத்தப்பா, காலிஸ், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், ரையான் டென் டஸ்சாட் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். கொல்கத்தா அணி இந்த போட்டி தொடரில் எந்த ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்கவில்லை. 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து 14 வெற்றிகளை அந்த அணி கண்டுள்ளது.

சுனில் நரினுக்கு தடை

சுனில் நரினுக்கு தடை

கொல்கத்தா அணியின் முக்கிய சொத்தான சுனில் நரின் பந்து வீச்சு அரை இறுதியில் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாக நடுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டால்பினுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவரது பந்து வீச்சு புகாருக்கு ஆளாகி இருந்தது. ஒரு வீரர் இரண்டு முறை பந்து வீச்சு புகாருக்கு ஆளானால் அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாது. எனவே இன்றைய இறுதிப்போட்டியில் சுனில் நரின் விளையாட முடியாது. இனிமேல் அவரது பந்து வீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அனுமதி கிடைத்த பிறகே களம் திரும்ப முடியும். சிக்கனமாக ரன் கொடுத்து விக்கெட்டை வீழ்த்தும் திறன் படைத்த சுனில் நரின் இல்லாதது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

பழிதீர்க்குமா சென்னை?

பழிதீர்க்குமா சென்னை?

இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அந்த தோல்விக்கும், 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை அணி, கொல்கத்தாவிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ரூ36 கோடி பரிசுத் தொகை

ரூ36 கோடி பரிசுத் தொகை

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.36 கோடியாகும். சாம்பியன் மகுடத்தை கையில் ஏந்தும் அணிக்கு ரூ.15 கோடியும், இறுதிப்போட்டியில் தோற்கும் அணிக்கு ரூ.8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

இதர அணிகளுக்கு..

இதர அணிகளுக்கு..

அரைஇறுதியில் தோல்வியடையும் அணிகள் தலா ரூ.3 கோடி வீதம் பெறும். 5 முதல் 10-வது இடம் வரை பிடிக்கும் அணிகளுக்கு ரூ.1.25 கோடி வீதம் கிடைக்கும்.

Story first published: Saturday, October 4, 2014, 10:02 [IST]
Other articles published on Oct 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+