Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராயுடுவுக்கு சரியான மாற்று.. "ஹாரி ப்ரூக்ஸ்" சென்னை அணியின் டார்கெட் இவர்தான்.. காரணம் என்ன?

கொச்சி: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மீண்டும் ஹோம் மற்றும் அவே மைதானங்களில் நடக்க உள்ளதால், சென்னை அணி ஹாரி ப்ரூக்ஸை வாங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. சரியாக இன்று மதியம் 2.30 மணியளவில் ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மினி ஏலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகமுக்கியமான ஏலமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகும்.

தோனியின் கடைசி தொடர்?

தோனியின் கடைசி தொடர்?

இதனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கான சென்னை அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு தோனிக்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓய்வை அறிவித்த உத்தப்பா, பிராவோ ஆகியோருக்கும், சீனியர் வீரர்களான ராயுடு மற்றும் தோனிக்கும் சேர்த்து மாற்று வீரர்களை சென்னை அணி கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

சென்னை அணியின் கையிருப்பு

சென்னை அணியின் கையிருப்பு

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மீண்டும் ஹோம் மற்றும் அவே ஆட்டம் என்று நடக்கவுள்ளது. அதனால் சென்னை அணி 2018ம் ஆண்டு ஏலத்தில் எப்படி மைதானத்திற்கு ஏற்ப வீரர்களை வாங்கியதோ, அப்படியே வீரர்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் சென்னை அணியின் கைகளில் ரூ.20.45 கோடி மட்டுமே இருக்கிறது. இதனிடையே முக்கிய ஆல் ரவுண்டரான சாம் கரணை ஏலத்தில் வாங்க பல்வேறு அணிகளும் போட்டிபோடும் என்பது நிச்சயம்.

சாம் கரணுக்கு வாய்ப்பு?

சாம் கரணுக்கு வாய்ப்பு?

அதனால் சென்னை அணி சாம் கரணை ஏலத்தில் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவாகும். ஆனால் அவருக்கு மாற்றாக இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக்ஸை சென்னை அணி டார்கெட் செய்யும் என்று பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம் மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரரான ஹாரி ப்ரூக்ஸ், ராயுடுவுக்கு சரியான மாற்றாக இருப்பார். அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா வீரர்களை போல் சென்னை மைதானத்திற்கு ஏற்ற பேட்ஸ்மேனாக இருப்பதால், சென்னை அணி இவரை டார்கெட் செய்யும்.

ஹாரி ப்ரூக்ஸ் அசத்தல்

ஹாரி ப்ரூக்ஸ் அசத்தல்

அதேபோல் கேமரூன் கிரீனை போல் அல்லாமல் ஸ்கூப், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் என்று அனைத்துவிதமான ஷாட்களையும் ஆசிய மைதானங்களிலேயே விளாசி அனைவருக்கும் தன்னை நிரூபித்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளாசிய சதமும், அவரின் அதிரடியும் ஹாரி ப்ரூக்ஸ் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அதேபோல், பாகிஸ்தான் மண்ணிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்று சதங்கள் விளாசி அசத்தியுள்ளார்.

பெரிய விலை

பெரிய விலை

இதனிடையே டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவையாக இருக்கும் நிலையில், ஹாரி ப்ரூக்ஸை வாங்க சென்னை அணி பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை வரும். ஆனால் எப்போதும் மினி ஏலத்தில் ரூ.20 கோடி அளவிலேயே பங்கேற்கும் சென்னை அணி, இரு வீரர்களுக்கு அதிக தொகை கொடுக்க முன் வந்துள்ளது.

பொறுத்திருந்து பார்க்கலாம்

பொறுத்திருந்து பார்க்கலாம்

ஒரு முறை மேக்ஸ்வெல்லுக்கு ரூ.15 கோடி வரை கொடுக்க முன் வந்தது. இதனால் ஹாரி ப்ரூக்ஸை சென்னை அணி வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் சென்னை அணியின் திட்டத்தையும், தோனியின் வியூகங்களையும் கணிக்க முடியாது என்பதால், எந்த வீரரை ஏலத்தில் வாங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Friday, December 23, 2022, 11:57 [IST]
Other articles published on Dec 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+