அவர் வந்திருக்கணும்.. அவர் மட்டும்தான் நேசமணியை காப்பாத்த முடியும்.. சிஎஸ்கே டிவிட்டை பாருங்க!
Recommended Video
சென்னை: கான்டிராக்டர் நேசமணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்திருக்கும் டிவிட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
நேசமணிக்காக உலகமே உருகிக் கொண்டு இருக்கிறது. பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேல் நேசமணி என்ற பெயரில் நடித்து இருந்த கதாபாத்திரம் தற்போது உலகம் முழுக்க பிரபலமாகி உள்ளது.
இன்ஜினியரிங் தொடர்பான பேஸ்புக் பக்கம் ஒன்றில் வெளியான போஸ்ட்தான் இதற்கு காரணம். ஆம், ஒரே ஒரு போஸ்ட்தான் உலகம் முழுக்க இது வைரலாக காரணமாக இருந்தது.
டங் டங்னு சத்தம் வரும்.. நாசமாப் போன நேசமணி.. எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்! #Nesamani

சுத்தியல் படம்
அந்த பேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் படத்தை பகிர்ந்து, இதை உங்கள் மொழியில் எப்படி அழைப்பீர்கள் என்று ஒருவர் கேட்டு இருந்தார். அதற்கு பல நாடுகளை சேர்ந்த மக்கள் பதில் அளித்து இருந்தனர். தமிழர்களும் சுத்தியல் என்று பதில் அளித்தனர். பல மொழிகளை தாய் மொழியாக கொண்ட மக்கள் இதற்கு பதில் அளித்தனர்.

சொன்னது என்ன
இதற்கு தமிழர் ஒருவரிடம் இருந்து வித்தியாசமான பதில் வந்தது. அந்த பதில்தான் தற்போது பெரிய வைரலாகி உள்ளது. யாருமே எதிர்பார்க்காத அந்த பதில் தற்போது இணையத்தையே கலக்கி இருக்கிறது. அவர் நேசமணி குறித்து மிகவும் உருக்கமாக டிவிட் செய்து இருந்தார்.

பதில் அளித்தார்
விக்னேஷ் பிரபாகர் என்ற நபர் அதில், பதில் அளித்து இருந்தார். அதில், இதன் பெயர்தான் சுத்தியல். நாம் இதை வைத்து அடிக்கும் போது டங் டங் என்று சத்தம் வரும். இதை வைத்து பெயிண்டிங் கான்டிராக்டர் நேசமணியின் தலை ஜமினில் உடைக்கப்பட்டது. அவரது மருமகன்தான் தலையை உடைத்தது. பாவம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதற்காக டிவிட் செய்தது. #pray_for_neasamani என்ற டேக்கில் டிவிட் செய்து அவர்களும் காமெடி செய்தனர். அதில், தன்னுடைய வேகமான செயல்பாடு மூலம் ஒருவர் மட்டும்தான் நேசமணியை காப்பாற்ற முடியும். ஆனால் அவரும் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார் என்று தோனியின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதற்காக டிவிட் செய்தது. #pray_for_neasamani என்ற டேக்கில் டிவிட் செய்து அவர்களும் காமெடி செய்தனர். அதில், தன்னுடைய வேகமான செயல்பாடு மூலம் ஒருவர் மட்டும்தான் நேசமணியை காப்பாற்ற முடியும். ஆனால் அவரும் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார் என்று தோனியின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

வைரல்
இதனால் தற்போது நேசமணி உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் உலகம் முழுக்க பிரபலம். அதில் தற்போது நேசமணி குறித்து டிவிட் வைத்துள்ளது. இதையடுத்து பலர் நேசமணி யார், ஏன் அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications