சிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு..? ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்
சென்னை:ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளை விளையாடுகிறது. நடப்பு ஐபிஎல்லின் முதல் போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது.
12வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
இரு அணிகள் மோதும் போட்டி என்றால் ரசிகர்களிடையே காணப்படும் எதிர்பார்ப்பை சொல்ல வேண்டியதில்லை. முதல் போட்டியை சென்னையின் கோட்டையில் விளையாடவுள்ளதால் அனைவர் மத்தியிலும் பலமடங்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

23 முறை சந்திப்பு
சென்னை, பெங்களூரு அணிகள் இதுவரை மோதிய 23 போட்டிகளில் சென்னை அணி 15லும், பெங்களூரு அணி 7 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

வெளிநாட்டு வீரர்கள் அதிகம்
அதிகபட்சமாக பெங்களூரு அணி கேப்டன் கோலி 732 ரன்களும், சென்னை கேப்டன் தோனி 710 ரன்களும் எடுத்துள்ளனர்.இந்த ஆண்டில் இவ்விரு அணிகளில் பெங்களூரு அணியில் திறமையான வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அணியின் பலம்
அதில் ஹெட்மயர், கிளாசன், சிவம் துபே, மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளதால் கோலி அணியின் பலம் கொஞ்சம் ஜாஸ்தி என்றே கூறலாம். சென்னை அணியைப் பொறுத்தவரையில், மோஹித் சர்மா, கெய்க்வாட் ஆகியோர் மட்டுமே இணைந்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தோனி, கோலி இணைந்து நடித்த வீடியோவால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை, பெங்களூரு அணிகளுக்கிடையேயான போர், பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதனை ஈடுகட்டும் நாளைய தொடக்க ஆட்டம் இருக்கும் என்ற எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications