For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. ! 20வது ஓவரில் என்னா டென்ஷன்..! சென்னை த்ரில்லிங் வெற்றி

Recommended Video

6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபத்தை வீழ்த்தியது சென்னை

சென்னை:ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

சென்னையில் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்சஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

1
45917

இதையடுத்து, களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வார்னர் அபாரமாக ஆடி 57 ரன்கள் குவித்தார். மணிஷ் பாண்டே 83 எடுத்தார்.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களில் டுபிளெசிஸ் 1 ரன்னில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர், வந்த சுரேஷ் ரெய்னா, வாட்சனுடன் கை கோர்த்தார்.

ரெய்னா 38

ரெய்னா 38

இருவரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். ஸ்கோர் 80 ரன்களை எட்டிய போது சின்ன தல ரெய்னா 38 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அபாரமாக ஆடிய வாட்சன் அரைசதம் கடந்தார்.

96 ரன்களில் அவுட்

96 ரன்களில் அவுட்

அதன்பின்னர் வாட்சனின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவருக்கு இணையாக ராயுடுவும் பக்கபலமாக இருந்தார். சதத்தை நெருங்கவார் என்று எதிர்பார்க்கப் பட்ட வாட்சன் 96 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனிக்கு பதில் ஜாதவ்

தோனிக்கு பதில் ஜாதவ்

அவரது ரன்களில் 6 சிக்சர்கள், 9 பவுண்ரிகள் அடங்கும். குறிப்பாக ரஷித் கானின் பந்துகளை பதம் பார்த்துவிட்டார். 18வது ஓவரில் அவர் வெளியேறிய போது தல தோனி வருவார்... பினிஷிங் கொடுப்பார் என்று எதிர்பார்க்க களத்துக்கு வந்ததோ அவரின் பரம சிஷ்யர் கேதர் ஜாதவ்.

20வது ஓவர் டென்ஷன்

20வது ஓவர் டென்ஷன்

ஆட்டத்திலேயே 20வது ஓவர் தான் பிபி எகிற வைக்கும் படியாக இருந்தது. அந்த ஓவரில் சென்னை பெற 9 ரன்கள் தேவை. ரசிகர்கள் எல்லோருக்கும் கடந்த போட்டி கண் முன்னே வந்து போக... மைதானத்தில் உச்சக்கட்ட டென்ஷன்.

சிக்சருக்கு பறந்த பந்து

சிக்சருக்கு பறந்த பந்து

முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 2வது பந்தை எதிர்கொண்ட கேதர் ஜாதவ் பந்தை சிக்சருக்கு அடிக்க... மைதானமே அல்லோல கல்லோலப்பட்டது. 3வது பந்தில் மறுபடியும் ஒரு ரன். அப்பவும் விட்டேனா பார்... என்று டென்ஷன்.

அப்பாடா... வெற்றி

அப்பாடா... வெற்றி

4வது பந்தில் ராயுடு அவுட்டாக.. என்ன நடக்கிறது என்பது புரியாமல் பயங்கர அமைதியானது. 2 பந்துகள்... 1 ரன் என்ற ஸ்கோர் இருக்க.. ஒரு வழியாக... அதையும் எடுத்த சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்றது.

பட்டியலில் முதலிடம்

பட்டியலில் முதலிடம்

இந்த போட்டியில் கிடைத்த வெற்றியால் அந்த அணிக்கு 16 புள்ளிகள் கிடைத்தன. ஜம்மென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறியது சென்னை.

Story first published: Wednesday, April 24, 2019, 1:05 [IST]
Other articles published on Apr 24, 2019
English summary
Chennai super kings won against sun risers Hyderabad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+