CSK vs KXIP: டாஸ் வென்றது தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ்.. பஞ்சாபில் மீண்டும் வந்தார் கெய்ல்
Recommended Video

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய முக்கிய ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்தது. ஆனால், 4-வது போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வென்று ரசிகர்களை உற்சாகப்படுத்த சென்னை அணி முடிவு செய்திருக்கிறது.
சென்னை அணியில் இருந்து லிங்கி இங்கிடி, டேவிட் வில்லே ஆகியோர் விலகி விட்டனர். தற்போது, ஆல்ரவுண்டர் பிராவோ காயத்தால் விலகியுள்ளார். இதனால் சென்னை அணி கடும் சவாலை சந்தித்துள்ளது.

சென்னை பேட்டிங்
இந்நிலையில், சேப்பாக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

கெய்ல் சேர்ப்பு
இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து ஹர்தஸ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக கெய்ல் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் மீண்டும் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பிராவோ இல்லை
அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஷர்துல் தாகூர், மோஹித் சர்மா மற்றும் டூவைன் பிராவோ ஆகியோர் அணியில் இல்லை. அவர்களுக்கு பதிலாக ஸ்காட் குஜ்ஜிலின், ஹர்பஜன் சிங் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வீரர்கள் விவரம்
பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்: கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சாம் கர்ரன், ரவிசந்திர அஸ்வின், ஆண்ட்ரூ டை, முருகன் அஸ்வின், முகமது சமி.

யார்? யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்: வாட்சன், டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, கேதர் ஜாதவ், தோனி, ரவீந்திர ஜடேஜா,தீபக் சாஹர், ஸ்காட் குஜ்ஜெலிஜின், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.


Click it and Unblock the Notifications