சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியை வென்றால் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுவதோடு, புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும். இதற்காக சென்னை அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை அணியை ராஜஸ்தான் அணி வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.
அதுமட்டுமல்லாமல் சென்னை அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி 200வது போட்டியில் களமிறங்கியுள்ளார். இதனால் சிஎஸ்கே - ஆர்ஆர் இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அதேபோல் சான்ட்னர் மற்றும் ப்ரிடோரியஸ் நீக்கப்பட்டு, தீக்சனா மற்றும் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மகாளா டெத் ஓவரிலும், தீக்சனா பவர் பிளேவிலும் பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இளம் வீரர் ஆகாஷ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் போல்ட் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. இதனால் அவருக்கு பதிலாக குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பந்துவீச்சின் போது ஆடம் ஸாம்பா களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ராஜஸ்தான் அணி மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ளது.
சென்னை அணி விவரம்: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ஜடேஜா, தோனி, மகாளா, தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்
ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மயர், ஜுரல், அஸ்வின், ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, சாஹல்