Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs DC: குவாலிபயர் 2 போட்டியில் டாஸ் வென்ற தோனி அண்ட் கோ பவுலிங்... முரளி விஜய் அதிரடி நீக்கம்

Recommended Video

IPL 2019 Chennai vs Delhi | டெல்லிக்கு எதிராக குவாலிபையர் போட்டியில் சென்னை பந்து வீச்சு

விசாகப்பட்டினம்: டெல்லி அணிக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் சென்னை அணியில் இருந்து முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

1
45948

ஐபிஎல் தொடரின் 2வது குவாலியர் போட்டியில் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. விசாகப் பட்டினம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.

Chennai super kings won the toss and chose to bowl first against delhi capitals

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அதிரடி வீரர் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மீண்டும் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இந்த போட்டியிலும் பங்கேற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்: டூ பிளசிஸ், சேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, டூவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி விவரம்: பிரிதிவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், காலின் முன்ரோ, அக்ஷர் பட்டேல், ஸ்ராபேன் ரூதர்போர்டு, கீமோ பால், அமித் மிஷ்ரா, பவுல்ட், இஷாந்த் சர்மா.

இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்த சென்னை அணியானது முக்கியமான, அதே நேரத்தில் அதிரடியான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள மும்பை அணியை எதிர்கொள்கிறது. இறுதி போட்டி வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.

Story first published: Friday, May 10, 2019, 20:08 [IST]
Other articles published on May 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+