CSK vs SRH: டாஸ் வென்ற சென்னை பவுலிங்… பேட் செய்யாததற்கு புதிய காரணம் சொன்ன தோனி
சென்னை:சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 41வது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் களம் காண்கின்றன.
போட்டியுடன் சன் ரைசர்ஸ் அணி வீரர்களான பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோர் உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் விளையாட தாயகம் திரும்புகின்றனர். எனவே இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க சன் ரைசர்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

பிளே ஆப் உறுதியாகுமா?
அதேபோன்று கடந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த சென்னை அணி அதில் இருந்து மீண்டு பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கோடு விளையாடுகிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார்.

மகிழ்ச்சியான ஒன்று
பின்னர் இந்த போட்டி மற்றும் மைதானம் குறித்தும் கேப்டன் தோனி கூறியதாவது : சென்னையில் எப்போதும் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இந்த மைதானம் அதிக அளவு பந்துவீச்சுக்கு முதலில் ஒத்துழைக்கும்.

பந்துவீச்சு தேர்வு
இங்கு பலமுறை விளையாடி உள்ளதால், அந்த அனுபவத்தின் அடிப்படையில் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தேன். ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் விளையாடுகிறார்.

சுழற்பந்துக்கு சாதகம்
ஏனெனில், சென்னை மைதானம் அதிக அளவு சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். இதுபோன்ற மைதானங்களில் ஹர்பஜன் சிறப்பாக செயல்படுவார். எனவே தாக்கூரை நீக்கிவிட்டு ஹர்பஜன் இடம்பெற்றுள்ளார் என்று தோனி கூறினார்.


Click it and Unblock the Notifications