Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பட்டையைக் கிளப்பிய கில்லீஸ்.. 2வது முறையாக டிஎன்பிஎல் பைனலுக்கு முன்னேறியது!

திருநெல்வேலி: தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் இரண்டாவது சீசனிலும், முதல் சீசனைப் போலவே, இறுதிப் போட்டியில் தூத்துக்குடியும் சேப்பாக்கம் அணியும் மோத உள்ளன.

நேற்று நடந்த தகுதிச்சுற்று 2வது ஆட்டத்தில், கோவையை, 27 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் அணி வென்றது. இதன் மூலம் அந்த அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியன் தூத்துக்குடி அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. பைனலுக்கு நுழையப் போகும் அடுத்த அணிக்கான தகுதிச் சுற்று-2 போட்டி, திருநெல்வேலியில் நேற்று இரவு நடந்தது.

சேப்பாக் கில்லீஸ்

சேப்பாக் கில்லீஸ்

இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகோ கோவை கிங்ஸ் அணியும் மோதின. டாஸை வென்று பேட்டிங்கில் களமிறங்கியது கோவை. ஆனால், கோவை அணியின் பேட்டிங் எடுபடவில்லை.

கோவை பேட்டிங் சொதப்பல்

கோவை பேட்டிங் சொதப்பல்

முகமது 30 ரன்களும், ஹரிஷ்குமார், 32 ரன்களும் எடுக்க, 20 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு, 136 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய சேப்பாகம் அணியின் ஓப்பனர் கோபிநாத், 5 பந்துகளில், 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மழையால் வென்ற கில்லீஸ்

மழையால் வென்ற கில்லீஸ்

தலைவன் சற்குணம், 33 ரன்கள், கார்த்திக், 38 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தபோது, மழை பெய்தது. 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை விடாததால், விஜேடி முறையில் கணக்கிடப்பட்டு, 27 ரன்கள் வி்த்தியாசத்தில் சேப்பாக்கம் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

2வது முறையாக பைனல்

2வது முறையாக பைனல்

இதன் மூலம், முதல் சீசனைப் போலவே, இரண்டாவது சீசனின் பைனலிலும், தூத்துக்குடியும், சேப்பாக்கம் அணியும் மோத உள்ளன. நாளை பைனல் நடக்கிறது. கடந்த முறை கோப்பையை பெறத் தவறியது கில்லீஸ். இந்த முறை வெல்லுமா?

Story first published: Saturday, August 19, 2017, 11:18 [IST]
Other articles published on Aug 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+