Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி.. கோப்பையை வென்றது சேப்பாக் கில்லீஸ்.. போராடி தோற்ற திருச்சி அணி!

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை வென்றது.

Recommended Video

Chepauk Super Gillies Wont the TNPL 2021! 3rd Time Champion Gillies | OneIndia Tamil

ஐந்தாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் இன்று திருச்சி வாரியர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டின.

டாஸ்

டாஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் சிறப்பான தொடக்கம் அமைந்தது. ஓப்பனிங் வீரர்கள் கௌசிக் காந்தி மற்றும் ஜகதீசன் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த காந்தி 26 ரன்களுக்கு அவுட்டானார்.

கடின இலக்கு

கடின இலக்கு

இதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. ராதாகிருஷ்ணன் 3, சசிதேவ் 12 ரன்கள், சதீஷ் 11, ஹரிஷ் குமார் 13 என வந்த வேகத்தில் திரும்பினர். மறுமுணையில் யாருக்கும் திணறாமல் அதிரடி காட்டிய ஜகதீசன் 58 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். இதில் 2 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த ஒற்றை ஆள் போராட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 183 ரன்களை குவித்தது.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியில் தொடக்க வீரர்கள் சந்தோஷ் சிவ் மற்றும் அமித் சாத்விக் ஆகியோர் முதல் பந்து முதலே அடித்து ஆட வேண்டும் என்ற ப்ளானுடன் களமிறங்கினர். இதன் விளைவாக பேட்டை சுழற்றி தங்களால் முயன்ற ரன்களை தொடக்கத்தில் கொடுத்து சென்றனர். 12 பந்துகளை சந்தித்த சந்தோஷ் ஷிவ் 16 ரன்களையும், 16 பந்துகளை சந்தித்த அமித் 36 ரன்களையும் குவித்தனர்.

சொதப்பல்

சொதப்பல்

பின்னர் வந்த வீரர்களும் அதே ஃபார்முலாவை பின்பற்றினர். நிதிஷ் ராஜகோபால் 26 ரன்களையும், அந்தோனி தாஸ் 13 ரன்கள் என அதிரடி காட்ட அந்த அணி 102 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. தொடக்கம் முதல் அதிரடி காட்டினாலும், இறுதியில் அதிரடி காட்டி வெற்றி பெற வைக்க 5 வீரர்கள் மட்டுமே அந்த அணியின் கையில் இருந்தது.

திக் திக் நிமிடங்கள்

திக் திக் நிமிடங்கள்

இதன் பின் வந்த சரவண குமார் ஒற்றை ஆளாக அதிரடி காட்டி சென்னை அணிக்கு தலைவலியை கொடுத்தார். சிஸ்கர், பவுண்டரி என விளாசிய அவர், 25 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். எனினும் அவரால் கடைசி நேரத்தில் 175 ரன்கள் என்ற அளவிற்கே அணியை கொண்டு செல்ல முடிந்தது. இதனால் சேப்பாக் கில்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

Story first published: Sunday, August 15, 2021, 23:42 [IST]
Other articles published on Aug 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+