ஆரம்பத்தில் அதிரடி...! அப்புறம் வழக்கமான சொதப்பல்..! 149 ரன்களை திருச்சிக்கு நிர்ணயித்த சேப்பாக்
நெல்லை: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு, 149 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
டிஎன்பிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில், நெல்லையில் தொடங்கிய போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் மோதின. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து, சேப்பாக் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் கவுசிக் காந்தியும், கங்கா ஸ்ரீதர் ராஜூவும் வந்தனர். யாரும் எதிர் பார்க்காத வகையில் ஒரு ரன்னில் வெளியேறினார் கவுசிக் காந்தி. இதையடுத்து, 2வது விக்கெட்டுக்கு கோபிநாத் வந்தார்.

ரன்கள் சேர்ப்பு
ஸ்ரீதர் ராஜூவும், கோபிநாத்தும் மெதுவாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். ரன்கள் உயர ஆரம்பித்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கோபி நாத்தும், கங்கா ஸ்ரீதர் ராஜூம் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

தடுமாறிய சேப்பாக்
2 விக்கெட்டுகள் சீக்கிரமாக விழுந்ததால் தடுமாறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். உதிரசாமி 12 ரன்களில் வெளியேற, அஸ்வினும், ஹரிஷ் குமாரும் கை கோர்த்தனர். அவர்களில் ஹரீஷ் குமார், திருச்சி வாரியர்ஸ் பந்துகளை சிதறடித்தார்.

4 சிக்சர்கள்
அவர் 4 சிக்சர்களை அதிரடியாக விளாசி ரன் விகிதத்தை உயர்த்த காரணமாக விளங்கினார். அவருக்கு பக்கபலமாக அஸ்வின் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் பந்துகளை அடித்து விரட்டினார் ஹரிஷ் குமார்.

ஹரிஷ் அவுட்
இந்த கூட்டணியை பிரிக்க திருச்சி வாரியர்ஸ் அணி பவுலர்கள் பகீரத முயற்சி செய்தனர். ஆனாலும் அது பலிக்கவில்லை. ரன்கள் அதிவேகமாக வர ஆரம்பித்தன. 19வது ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சித்த ஹரிஷ் குமார் கேட்சாகி வெளியேறினார்.

149 ரன்கள் இலக்கு
அதன் பிறகு, வந்தார் ஆரிப். 20வது ஓவர். 150 ரன்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். ஆனால் 20வது ஓவரில் எதிர்பார்த்த ரன்கள் வரவில்லை. 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.


Click it and Unblock the Notifications