Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏற்கனவே வெளியேறிய நடப்பு சாம்பியன்.... முதல் வெற்றி பெற்ற சேப்பாக்!

Recommended Video

ஏற்கனவே வெளியேறிய சாம்பியன்...முதல் வெற்றி பெற்ற சேப்பாக்!- வீடியோ

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்த நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதல் வெற்றியை பெற்றது. விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 13 ரன்களில் வென்றது.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 5 ஆட்டங்களில் அனைத்திலும் தோல்வி அடைந்து, அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.

Chepauk super gillies tasted first win in the tnpl

இந்த நிலையில், விபி காஞ்சி வீரன்ஸ் அணியுடன் நேற்று சேப்பாக் அணி விளையாடியது. இதில் 13 ரன்களில் சேப்பாக் வென்றது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 5 தோல்விகளுடன், சேப்பாக் மற்றும் காஞ்சி அணிகள் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் இல்லை.

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. எஸ். கார்த்திக் 44 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் கோபிநாத் 31 ரன்கள் எடுத்தார். கடைசியில் முருகன் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய காஞ்சி அணிக்கு விஷால் வைத்யா 24, எஸ். அருண் 27 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை தந்தனர். மற்றவர்கள் ஓரளவுக்கு ரன் குவித்தாலும் தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பபுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் சேப்பாக் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Wednesday, August 1, 2018, 11:23 [IST]
Other articles published on Aug 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+