Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு எதிராக 6 ரன் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின. திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Chepauk Super Gillies won by 6 runs against dindigul Dragons

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கோபிநாத் 76(53), சற்குணம் 72(50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

திண்டுக்கல் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

திண்டுக்கல் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 60(53) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரவீந்திர அஸ்வின் கடைசியில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். 5 போட்டிகளில் விளையாடி உள்ள திண்டுக்கல் அணியின் முதல் தோல்வி இதுவாகும். 76 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் கோபிநாத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Friday, September 9, 2016, 0:29 [IST]
Other articles published on Sep 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+