Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போன சீசன் மாதிரியே இந்த முறையும் மோதல்.. கை மாறுமா "கப்"?

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் 2ல் நாளை நடக்கும் பைனலில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணியும் மோதுகின்றன.

முதல் சீசனைப் போலவ, இந்த சீசனிலும் இறுதிப் போட்டியில் தூத்துக்குடியும், சேப்பாக்கமும் மோதுகின்றன என்பதால் ரசிகர்களிடையே இந்தப் போட்டி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, 13 போட்டிகளில் வெற்றி என்ற மிகப் பெரிய சாதனையுடன் களமிறங்குகிறது தூத்துக்குடி அணி. வாஷிங்டன் சுந்தர், தூத்துக்குடி அணிக்கு கிடைத்துள்ள முத்து.

வாஷிங்டன்

வாஷிங்டன் "முத்து"

445 ரன்களுடன், அதிக ரன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலி்ல இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தினேஷ் கார்த்திக் பலம்

தினேஷ் கார்த்திக் பலம்

தினேஷ் கார்த்திக் போன்ற தேசிய அணிக்காக விளையாடிய அனுபவ வீரர் இடம் பெற்றுள்ளது, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு மிகப் பெரிய பலம் என்று சொல்லலாம்.

வலுவான தூத்துக்குடி

வலுவான தூத்துக்குடி

முதல் சீசனில், சேப்பாக்கம் அணியை, 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து, 13 போட்டிகளில் வெற்றி என, அனைத்து புள்ளி விபரங்களும் தூத்துக்குடி அணிக்கே மிகவும் சாதகமாக உள்ளது.

சேப்பாக்கமும் சாதாரணமானதல்ல

சேப்பாக்கமும் சாதாரணமானதல்ல

அதேசமயம், நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று பட்டய கிளப்பி வரும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த ஆண்டு லீக் போட்டிகளில், தூத்துக்குடியைத் தவிர மற்ற அனைத்து அணிகளையும் வென்றுள்ளது.

தலைவன் பார்த்துக்குவார்

தலைவன் பார்த்துக்குவார்

தலைவன் சற்குணம் உள்ளிட்டோர் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். சாய் கிஷோர், 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியிலில் முதலிடத்தில் உள்ளார்.

சேப்பாக்கத்தை வெல்லுமா கில்லீஸ்

சேப்பாக்கத்தை வெல்லுமா கில்லீஸ்

சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடக்கும் இந்த போட்டி, உள்ளூர் அணிக்கு சாதகமாக அமையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அனைத்து அம்சங்களையும் அலசி பார்த்தால், தூத்துக்குடிதான் கோப்பையை தூக்கும் என்று சத்தியமே செய்யலாம்.

Story first published: Saturday, August 19, 2017, 13:38 [IST]
Other articles published on Aug 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+