
பிசிசிஐ முடிவுரை
இந்த குழு, 2021 டி20 உலககோப்பை, 2022 டி20 உலககோப்பை மற்றும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என ஆகிய தொடருக்கு அணிகளை தேர்வு செய்து, அதில் இந்தியா ஒரு தொடரிலும் வெல்ல வில்லை. சேத்தன் சர்மா தலைமையிலான குழு மீது பல விமர்சனங்கள் ரொம்ப நாளாகவே வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு தற்போது தான் பிசிசிஐ முடிவுரை எழுதியுள்ளது.

கோலியை நீக்கினார்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 2021 டி20 உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் தொடர்ந்து கேப்டனாக இருப்பேன் என்று கூறினார். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்பு கோலி அதிரடியாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

கருத்து கேட்கவே இல்லை
இது விராட் கோலி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது கோலியிடம் பேசி தான் இந்த முடிவை எடுத்ததாக சேத்தன் சர்மா கூறினார். அதற்கு பதில் அளித்த கோலி, என்னை யாருமே தொடர்பு கொள்ளவில்லை. மீடியாவை பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். சேத்தன் சர்மா தலைமையிலான குழ கொடுத்த அழுத்தத்தால் டெஸ்ட் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகினார்.

வாழ்க்கை ஒரு வட்டம்
விராட் கோலி போன்ற ஒரு ஜாம்பவானை, அவரிடம் கருத்து கேட்காமலேயே சேத்தன் சர்மா நீக்கினார். தற்போது இந்த நிகழ்வு நடந்து ஒரு வருடம் கூட இன்னும் சரியாக ஆக வில்லை. சேத்தன் சர்மாவிடம் எந்த கருத்தையும் கேட்காமல், பிசிசிஐ அவரை அதிரடியாக நீக்கியது. அது மட்டுமல்லாமல், அந்த பொறுப்புகளுக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கோலிக்கு சேத்தன் சர்மா செய்தது, தற்போது அவருக்கே திருப்பி வந்துள்ளது. ஆம், வாழ்க்கை ஒரு வட்டம் தான்.


Click it and Unblock the Notifications











