Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை யாருக்கும் பிடிக்காது.. ரகசிய கேமிராவில் சிக்கிய சேத்தன் சர்மா.. கேப்டன்சி சர்ச்சையின் உண்மை!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை யாருக்குமே பிடிக்காது என்பதால் தான் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கினோம் என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை முற்றிலுமாக நீக்கி பிசிசிஐ அதிரடி காட்டியது. ஆனால் அதில் சேத்தன் சர்மா மட்டும் மீண்டும் தலைவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அப்போது இருந்தே சேத்தன் சர்மாவுக்காக பிசிசிஐ ஏன் இவ்வளவு சலுகைகளை கொடுக்கிறது என்ற விவாதங்கள் இருந்து வந்தன. அதற்காக நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சை நிகழ்வு

சர்ச்சை நிகழ்வு

இந்திய அணியில் விராட் கோலி கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது எவ்வளவு பெரிய பிரச்சினையாக வெடித்தது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், கேப்டன்சி பதவி சென்றதற்கு கங்குலி தான் காரணம் என விராட் கோலி ஒருபுறம் குற்றச்சாட்டு வைத்தார். மற்றொருபுறம் விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியும் கோலி கேட்கவில்லை என விராட் கோலி ஒருபுறமும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டனர்.

சேத்தன் சர்மா விளக்கம்

சேத்தன் சர்மா விளக்கம்

இந்நிலையில் இந்த விவகாரத்தின் உண்மை தன்மையை சேத்தன் சர்மா உடைத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய அணிக்கூட்டம் ஒன்றில் விராட் கோலி கூறிய ஏதோ ஒரு கருத்திற்கு சவுரவ் கங்குலி விமர்சனம் செய்திருந்தார். அப்போது இருவருக்கும் தொடங்கிய பிரச்சினை தான் தற்போது நீடித்து வருகிறது. தனது கேப்டன்சி பதவி பறிக்கப்பட்டதற்கு கங்குலி தான் காரணம் என விராட் கோலி நினைத்து வருகிறார்.

உண்மை தான்

உண்மை தான்

விராட் கோலி பதவி விலகுவதாக கூறிய போது, அந்த இடத்தில் 9 அதிகாரிகள் இருந்தோம். அப்போது கங்குலி மறுபரிசீலனை செய்யுமாறு கூறியது உண்மை தான். ஆனால் அதனை கோலி கேட்கவில்லை என நினைக்கிறேன். முன்பே கூறியதை போல அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்ததால் இதுபோன்ற விஷயங்கள் நடந்துவிட்டன. இந்த விவகாரத்தை கோலி பத்திரிகைகளில் தெரிவிக்க நினைத்து, தனக்கு தானே கெட்ட பெயரை பெற்றுக்கொண்டார்.

 யாருக்குமே பிடிக்காது

யாருக்குமே பிடிக்காது

உண்மையை சொல்லப்போனால் ரோகித் சர்மாவுக்கு இங்கு யாரும் ஒருதலைபட்சமாக நிற்கவில்லை. ஆனால் பிசிசிஐ-ல் கங்குலி உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு விராட் கோலியை பிடிக்காது. எனவே அதற்காக விராட் கோலியின் மோசமான ஃபார்மை பயன்படுத்தி கேப்டன்சியில் இருந்து நீக்கினார்கள். இது மிகவும் கேவலமான ஒன்று என சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 15, 2023, 9:40 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+