Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறுமை + சகிப்புத்தன்மை = புஜாரா... பிறந்தநாளில் தெறிக்கவிடப்பட்ட வாழ்த்துக்கள்!

டெல்லி : தன்னுடைய 33வது பிறந்தநாளை இன்றைய தினம் டெஸ்ட் போட்டிகளின் கிங்காக போற்றப்படும் சத்தீஸ்வர் புஜாரா கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்ததினத்தையொட்டி கேப்டன் விராட் கோலி மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பொறுமை மற்றும் சகிப்புத் தன்மைக்கு இவரே மிகச்சிறந்த உதாரணம் என்று பிறந்தநாள் வாழ்த்தில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிறப்பாக விளையாடிய புஜாரா

சிறப்பாக விளையாடிய புஜாரா

டெஸ்ட் போட்டிகளின் கிங்காக போற்றப்படும் சத்தீஸ்வர் புஜாரா, கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். பொறுமையாக இவர் சக வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த தொடரை வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இந்த தொடரில் சதமடிக்கவில்லை என்ற போதிலும் பந்த் உள்ளிட்டவர்களுடன் இவரது பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது.

பிசிசிஐ வாழ்த்து

பிசிசிஐ வாழ்த்து

இந்நிலையில் தனது 33வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடி வருகிறார் புஜாரா. இவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிசிசிஐயும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தை பகிர்ந்துள்ளது.

புஜ்ஜிக்கு கோலி வாழ்த்து

புஜ்ஜிக்கு கோலி வாழ்த்து

கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் புஜ்ஜி என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நல்ல ஆரோக்கியம், சந்தோஷம் மற்றும் மைதானத்தில் அதிக நேரம் விளையாட்டு ஆகியவை புஜாராவிற்கு இந்த ஆண்டில் அமையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெளியிட்ட பிசிசிஐ

வெளியிட்ட பிசிசிஐ

இந்நிலையில் பிசிசிஐ தனது டிவிட்டரில் புஜாராவின் டெஸ்ட் பேட்டிங் குறித்த தரவுகளை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக அவர் அடித்த சதத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனிடையே முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங்கும் புஜாராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்பி சிங் வாழ்த்து

ஆர்பி சிங் வாழ்த்து

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளின் வெற்றிக்கு பொதுவான காரணம் என்று ஆர்பி சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சிறப்பான ரன்கள் மட்டுமின்றி கிரீசில் அதிக நேரம் விளையாடுவதும் முக்கியமானது என்று இளம் தலைமுறையினருக்கு புஜாரா உணர்த்தியுள்ளதாக சிங் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

இதனிடையே முன்னாள் வீரர் வாசிம் ஜாபரும் புஜாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்துள்ளார். இதேபோல ரசிகர்களும் புஜாராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் நவீனத்தின் சுவர் என்று ரசிகர்கள் புஜாராவிற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

புஜாரா எடுத்துக்காட்டு

புஜாரா எடுத்துக்காட்டு

பொறுமை மற்றும் சகிப்பு தன்மைக்கு எடுத்துக்காட்டாய் புஜாரா விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் கவனம் உள்ளிட்டவை டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பான பேட்டிங்கிற்கு காரணமாக உள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, January 25, 2021, 17:45 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+