Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிவெட்டுற மனைவியை நம்புவதா... சதமடிக்க உதவும் பார்ட்னரை நம்புவதா... புஜாரா கேள்வி

மும்பை : கொரோனா வைரஸ் ஊடரங்கு காரணமாக முடித்திருத்தும் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாராவிற்கு அவரது மனைவி பூஜா முடிவெட்டி விட்டுள்ளார்.

தனக்கு பூஜா முடிவெட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புஜாரா, சதத்தை பூர்த்தி செய்ய கடைசி ரன்னை அடிக்க உதவும் கிரிக்கெட் பார்ட்னரை நம்புவதே அல்லது முடி வெட்டும் மனைவியை நம்புவதா எதற்கு அதிக தைரியம் வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புஜாராவின் இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் கமெண்ட் செய்துள்ளார். சௌராஷ்டிரா அணியின் வீரர் ஜெயதேவ் உனாத்கட், இந்த பதிவிற்கு சிரிப்பு எமோஜிகளை கொண்டு கமெண்ட் செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கிய வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கிய வீரர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவராக சத்தீஸ்வர் புஜாரா விளங்கி வருகிறார். இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,840 ரன்களை புஜாரா குவித்துள்ளார். இவரது சராசரி 48.66. இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ள புஜாரா, சமீபத்தில் ரஞ்சி கோப்பையை வென்ற சௌராஷ்டிரா அணிக்காவும் விளையாடி வருகிறார்.

வீட்டில் முடங்கியுள்ள புஜாரா

வீட்டில் முடங்கியுள்ள புஜாரா

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள சத்தீஸ்வர் புஜாராவிற்கு சமுக வலைதளங்கள், இன்ஸ்டா நேரலை நிகழ்ச்சிகள் போன்றவை நேரத்தை கடத்த உதவி புரிந்து வருகின்றன. தன்னுடைய மனைவி பூஜா உள்ளிட்ட குடும்பத்தினருடன் இவர் நன்கு பொழுதை போக்கி வருகிறார்.

கேப்ஷன் வெளியிட்ட புஜாரா

கேப்ஷன் வெளியிட்ட புஜாரா

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சலூன் கடைகளும் மூடியுள்ளதால் புஜாரா, முடிவெட்ட முடியாமல் அவதிக்குள்ளானார். இதையடுத்து அவருக்கு முடிவெட்ட அவரது மனைவி பூஜா முன்வந்தார். இந்நிலையில், தன்னுடைய மனைவி தனக்கு முடிவெட்டிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புஜாரா, போட்டியின்போது 99 ரன்கள் அடித்த நிலையில், சதத்தை பூர்த்தி செய்ய உதவும் பார்ட்னரை நம்புவதா அல்லது முடிவெட்டும் மனைவியை நம்புவதா, எதற்கு அதிக தைரியம் வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உனாத்கட் கமெண்ட்

உனாத்கட் கமெண்ட்

புஜாராவின் இந்த போஸ்ட்டை பார்த்த சௌராஷ்டிர அணி வீரர் ஜெய்தேவ் உனாத்கட், வாயை மூடியுள்ள குரங்குகளின் எமோஜியை வைத்து கமெண்ட் செய்துள்ளார். இதேபோல, ரசிகர்களும் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை அளித்துள்ளனர். புஜாராவின் இந்த கேப்ஷனை போடுவதற்கே அதிக தைரியம் வேண்டும் என்று அதில் ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

Story first published: Tuesday, May 19, 2020, 14:12 [IST]
Other articles published on May 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+