For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அர்ஜூனா விருதுக்கு புஜாரா பெயரை பரிந்துரை செய்தது பி.சி.சி.ஐ.

அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் புஜாரா, ஹாக்கி வீரர்கள் எஸ்.வி. சுனில், தரம்வீர் சிங், தீபிகா ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

By Karthikeyan

டெல்லி: அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் புஜாரா மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரது பெயர்களை பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டு துறையின் உயர் விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சத்தீஸ்வர் புஜாரா, மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரது பெயர்களை பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது.

Cheteshwar Pujara and Harmanpreet Kaur for Arjuna award

அதேபோல் ஹாக்கி வீரர்கள் எஸ்.வி.சுனில், தரம்வீர் சிங், தீபிகா ஆகியோரது பெயர்களை ஹாக்கி இந்தியா அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. ஹாக்கி இந்தியா சார்பில் மேஜர் தயான் சந்த் விருதுக்கு ஆர்.பி.சிங், சும்ராய் டேடீ பெயர்களும், துரோணாச்சாரியார் விருதுக்கு சந்தீப் சங்வான், ரோமேஷ் பதானியா பெயர்களும், ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சர்தார் சிங் பெயரும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

புஜாரா மற்றும் கவுர் ஆகியோரது சமீபத்திய செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும், அதனால் அவர்களின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, May 2, 2017, 0:57 [IST]
Other articles published on May 2, 2017
English summary
BCCI recommend Cheteshwar Pujara and Harmanpreet Kaur for Arjuna award
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X