Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் மேட்சுல கட்டை போடவும் தெரியும்.. டி20யில் தெறிக்கவிடவும் தெரியும்.. புஜாராவின் விஸ்வரூபம்!

இந்தூர் : இந்திய டெஸ்ட் வீரர் புஜாரா சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அதிரடியாக ஆடி தன் முதல் டி20 போட்டி சதம் அடித்து ஆச்சரியம் அளித்துள்ளார்.

புஜாரா இந்திய அணியில் டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டவர். ஒரீரு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்பௌ பெற்று இருந்தார். பின்னர் டெஸ்ட் அணியில் மட்டுமே தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

61 பந்துகளில் சதம்

61 பந்துகளில் சதம்

இந்நிலையில், உள்ளூர் டி20 தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக ஆடி வரும் புஜாரா, இரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் 61 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இதன் மூலம் தன்னால் டி20 போட்டியிலும் அதிரடியாக ஆட முடியும் என நிரூபித்தார் புஜாரா.

பவுண்டரி மழை

பவுண்டரி மழை

இதுவரை டி20யில் ஆறு அரைசதங்கள் அடித்துள்ள புஜாரா, முதல் முறையாக சதம் அடித்தார். அவர் அடித்த சதத்தில் 14 ஃபோர்கள், 1 சிக்ஸர் அடங்கும். சௌராஷ்டிரா அணி புஜாராவின் சதத்தின் உதவியுடன் 188 ரன்கள் குவித்தது.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

எனினும், அடுத்து ஆடிய இரயில்வேஸ் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அதிர்ச்சி அளித்தது. எனினும், இந்த போட்டியில் அடித்த சதம் மூலம் புஜாரா தான் டெஸ்ட் வீரர் மட்டுமல்ல என அழுத்தமாக நிரூபித்துள்ளார்.

ஏலம் போகவில்லை

ஏலம் போகவில்லை

குறிப்பாக, டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒரு அணி கூட புஜாராவை ஏலம் எடுக்க முன் வரவில்லை. கடந்த வருடங்களிலும் பல முறை புஜாரா ஏலம் போகாத நிலை இருந்தது.

நினைவில் இருக்குமா?

நினைவில் இருக்குமா?

தற்போது சதம் அடித்துள்ள புஜாரா இந்திய ஒருநாள் அணியின் கதவுகளை தட்டியுள்ளார். ஆனால், உலகக்கோப்பை முடியும் வரை இந்திய அணியில் புஜாராவை கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை. அதுவரை, புஜாரா டி20யில் அடித்த சதம் நினைவில் இருக்குமா?

Story first published: Thursday, February 21, 2019, 16:01 [IST]
Other articles published on Feb 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+