
குறிக்கோள்
நாம் விளையாடும் போது அரை சதம் அடிக்கும் போது ஒரு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் அதன் பிறகு அடுத்த குறிக்கோளை நோக்கி நாம் விளையாட செல்வோம். அதேபோல்தான் நூறாவது டெஸ்ட் எனக்கு மகிழ்ச்சியான தருணம். இருப்பினும் சதத்திற்கு பிறகு இரட்டை சதம் அடிப்பது போல் இங்கு 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது. இருப்பினும் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவது என்பதே எனது குறிக்கோள்.

மறக்க முடியாது
நான் 2010 ஆம் ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினேன். இது நடந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நேற்று நடந்தது போல் தான் இருக்கிறது. முதல்முறையாக அந்த தொப்பியை வாங்கும்போது மிகவும் பதற்றமாக இருந்தேன். அந்த தருணத்தை என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன். தற்போது பத்து ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி விட்டேன். டெஸ்ட் போட்டி நம்முடைய குணம் நம்முடைய பொறுமை ஆகியவற்றை கடுமையாக சோதிக்கும்.

டெஸ்டே சிறந்தது
இப்போதெல்லாம் டி20 கிரிக்கெட் தான் பிரபலமாகிவிட்டது. ஆனால் நீங்கள் எந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரரை போய் கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவது எவ்வளவு கடினம் என்று.. கிரிக்கெட் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எதை என் குறிக்கோளாக நினைத்தேனோ அதுவே என் தொழிலாக மாறிவிட்டது. கிரிக்கெட்டை தவிர நான் வேறு எதையும் செய்வது குறித்து கனவு கூட கண்டதில்லை. இதனால் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு வேறு எந்த உத்வேகமும் தேவையில்லை. நான் சர்வதேச கிரிக்கெட் விளையாட மட்டும் அல்ல உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினாலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்து தான் விளையாடுவேன்.

வெற்றிக்கு காரணம்
தோல்வி எனக்கு சுத்தமாக பிடிக்காது. கிரிக்கெட் விளையாடும் போது நான் மிகவும் கவனமாக இருப்பேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாது. பந்தை மட்டும்தான் நான் கவனமாக பார்ப்பேன். யோகா தொடர்ந்து செய்வதன் மூலம் எனக்கு எப்படி கவனமாக இருப்பது என உதவுகிறது. கடவுள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவர்தான் எனக்கு பலத்தையும், நல்ல எண்ணங்களையும் கொடுக்கிறார். நான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பயன்படுத்தவில்லை. அதுவும் என் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.

சிறந்த இன்னிங்ஸ்
நாம் வெற்றியாளராக மாற என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அதனை தொடர்ந்து சில காலத்துக்கு செய்தால் நிச்சயம் வெற்றி நமக்கு கிடைக்கும். அறிமுகப் போட்டியில் நான் 72 ரன்கள் அடித்தது நான் விளையாடியதில் சிறந்த இன்னிங்ஸ் ஆக கருதுகிறேன். அதன் பிறகு தென்னாப்பிரிக்காவில் 153 ரன்கள் அடித்ததையும் 2018 ஆம் ஆண்டு அடிலெய்டில் விளையாடி சதம் அடித்ததையும் சிறந்த இன்னிங்ஸாக கருதுகிறேன். எனினும் சதங்களை விட சில அரை சதங்களும் மிகவும் முக்கியமாக நான் விளையாடிருக்கிறேன்.

அடுத்த இலக்கு
சில அரை சதங்கள் போட்டியை காக்க உதவும். அந்த அரை சதங்கள் சதத்தை விட மிகவும் முக்கியம். தற்போது எனக்கு வயது 35 ஆகிவிட்டது. இன்னும் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன் குவித்து இந்திய அணிக்காக வெற்றி பெற்று தர வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். நான் அதிக ரன்கள் அடித்தால் என்னுடைய சராசரியும் அதிகரிக்கும். இதனால் 50 மேல் சராசரி வைக்க வேண்டும் என்ற எந்த குறிக்கோளுடனும் விளையாடவில்லை என புஜாரா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











