For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் இவர்தான்.. சம்பந்தமே இல்லாமல் அஸ்வின் பெயரை சொன்ன புஜாரா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பதவிக்காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என பேசி இருக்கிறார் இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர் செதேஷ்வர் புஜாரா.

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ள வீரர் யார் என்பது குறித்து தனது கணிப்பை புஜாரா வெளியிட்டுள்ளார். அது வேறு யாருமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின்தான்.

Cheteshwar Pujara Predicts India s Next Coach It Should be Ravichandran Ashwin

கம்பீர் தலைமையில் ஏற்ற இறக்கங்கள்

கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ், இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் ஆகியவற்றில் வெற்றி பெற்றதோடு, 2025 சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தையும் வென்றுள்ளது.

இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீரின் பயிற்சிமுறை குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது, ஆஸ்திரேலியாவிடம் பார்டர்-கவாஸ்கர் டிராபியை 1-3 என இழந்தது போன்றவை பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என சமன் செய்தாலும், அணித் தேர்வில் கம்பீரின் சில முடிவுகள் விவாதத்துக்கு உள்ளாகின.

அடுத்தது அஸ்வின்தான்.. புஜாரா சொன்ன காரணம்

சமீபத்தில் ஒரு நேர்காணலில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கு யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்று புஜாராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், "ரவிச்சந்திரன் அஸ்வின்" என்று பதிலளித்துள்ளார்.

கிரிக்கெட் குறித்த ஆழமான அறிவு, ஆட்டத்தின் நுணுக்கங்களை புரிந்து கொள்ளும் திறன், சமயோசிதமாக முடிவெடுப்பது என ஒரு பயிற்சியாளருக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் அஸ்வினிடம் இருப்பதாக புஜாரா கூறி உள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலுமே அஸ்வினுக்கு இருக்கும் பரந்த அனுபவம், இந்திய அணிக்கு நிச்சயம் கைகொடுக்கும். தோனி போன்ற ஒரு சிறந்த கேப்டனின் கீழ் பல ஆண்டுகள் விளையாடிய அனுபவமும் அவருக்குக் கூடுதல் பலம் என்றும் கூறி உள்ளார்.

அஸ்வின், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பம் முதலே களத்தில் ஒரு கேப்டனைப் போல செயல்படுபவர். ஆட்டத்தின் போக்கைப் கணிப்பது, எதிரணி வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப வியூகங்களை வகுப்பது போன்றவற்றில் அவர் கைதேர்ந்தவர். "மூளைக்கார கிரிக்கெட்டர்" என்று வர்ணிக்கப்படும் அஸ்வின், தனது யூடியூப் சேனல் மூலம் கிரிக்கெட் குறித்த தனது பார்வைகளையும், நுணுக்கங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 765 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான பந்துவீச்சாளராகத் திகழ்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். புஜாராவின் இந்த கணிப்பு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.

Story first published: Sunday, August 17, 2025, 13:25 [IST]
Other articles published on Aug 17, 2025
English summary
Cheteshwar Pujara Predicts India's Next Coach: 'It Should be Ravichandran Ashwin!'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+