Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புஜாரா மாதிரி இருந்தா பாதுகாப்பா இருக்கலாம்!! கொல்கத்தா காவல்துறை அட்வைஸ்

கொல்கத்தா : புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் தன் முதல் சதத்தை இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் அடித்தார்.

இந்திய அணியை கரை சேர்த்த புஜாராவின் சதம் கொல்கத்தா காவல்துறையை ஈர்த்துள்ளது.

புஜாரா விக்கெட் விழாமல் பாதுகாப்பாக ஆடியதை தங்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

பொறுப்பாக சதம் அடித்த புஜாரா

பொறுப்பாக சதம் அடித்த புஜாரா

முதல் டெஸ்டில் துவக்க வீரர்கள், கேப்டன் கோலி, துணை கேப்டன் ரஹானே என முக்கிய வீரர்கள் கைவிட்ட நிலையில், புஜாரா பொறுப்பாக ஆடி சதம் அடித்தார். இந்தியா 250 ரன்களை எட்டியது. அதில் 123 ரன்களை புஜாரா அடித்தார்.

தடுப்பாட்டம் ஆடினார்

தடுப்பாட்டம் ஆடினார்

விக்கெட்கள் விழுந்து கொண்டு இருந்த போது புஜாரா மொத்தமாக தடுப்பாட்டம் ஆட முற்பட்டார். ரன்னே எடுக்காமல், கட்டை போட்டு ஆஸ்திரேலிய வீரர்களை காய விட்டார் புஜாரா. தன் விக்கெட்டை காப்பாற்றுவதில் மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு நடந்து கொண்டார். இந்த விஷயத்தை கொல்கத்தா போக்குவரத்து காவல்துறை பிடித்துக் கொண்டது.

புஜாரா மாதிரி பாதுகாப்பா இருக்கணும்

தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டது. சதம் அடித்த புஜாரா ஒரு புறம் நிற்க, இந்த பக்கம் சீட் பெல்ட் அணிந்து ஒருவர் காரில் அமர்ந்து இருப்பதை போன்ற படத்தை போட்டு இருந்தனர். வாக்கியத்தில், "பாதுகாப்பு என்பது புஜாரா போல இருக்க வேண்டும்" என எழுதப்பட்டு இருந்தது. புஜாரா போல பொறுமையாக நின்று நிதானமாக வாகனங்களை ஓட்டுங்கள் என பிரச்சாரம் செய்துள்ளனர்.

பும்ராவை கலாய்த்த ஜெய்ப்பூர் போலீஸ்

பும்ராவை கலாய்த்த ஜெய்ப்பூர் போலீஸ்

இதற்கு முன் பல முறை இப்படி கிரிக்கெட் வீரர்களை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், ஜெய்ப்பூர் காவல்துறை பும்ராவை ஒரு முறை கோபப்படுத்தி விட்டனர். சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் பும்ரா நோ பாலில் விக்கெட் எடுத்தார். அதனால், நல்ல விக்கெட் வாய்ப்பு பறிபோனது. அந்த இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த போது பலரும் பும்ராவை விமர்சித்தனர்.

சிக்னல் கோட்டை தாண்டாதே

சிக்னல் கோட்டை தாண்டாதே

அந்த நேரத்தில் ஜெய்ப்பூர் காவல்துறை, சிக்னலில் கோட்டை தாண்டாமல் இருக்கவும் என்று கூறி பும்ரா நோ பால் வீசும் படத்தை வெளியிட்டனர். பும்ரா இதனால், கடுப்பாகி "நாட்டுக்கு என்ன உழைத்தாலும் இது தான் மரியாதை" என பொங்கி இருந்தார்.

Story first published: Friday, December 7, 2018, 15:40 [IST]
Other articles published on Dec 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+